உங்களுக்கு என்னதான் ஆச்சு.. மோசமாக மெலிந்த பாகுபலி ராணா.. உடம்பில் என்ன பிரச்சனை!?
நடிகர் ராணா உடல் மோசமாக மெலிந்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: நடிகர் ராணா உடல் மோசமாக மெலிந்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பாகுபலி படம் மூலம் உலகம் முழுக்க வைரலானவர் நடிகர் ராணா. இவர் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து இருந்தாலும் பாகுபலி படம்தான் அவருக்கு அடையாளம் கொடுத்தது.
அதிலும் இவர் பல்வாள்தேவன் கதாபாத்திரத்தில் நடித்தது பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் காட்சிக்கு காட்சி இவர் வில்லத்தனம் காட்டி இருந்தார்.

என்ன எடை
இந்த படத்திற்காக அவர் 110 கிலோ வரை எடையை உயர்த்தி இருந்தார். ஆம் உடல் எடையை நன்றாக ஏற்றி அதே சமயம், நல்ல ஷேப்பில் இருந்தார். அவரின் உடல் இந்த படத்தில் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் என்ன
ஆனால் இந்த படத்திற்கு பின் அவர் வேகமாக உடலை குறைத்தார். இந்த பிரம்மாண்ட படத்திற்கு பின் அவர் வேறு எந்த பெரிய படத்திலும் நடிக்கவில்லை. உடலிலும் நிறைய பிரச்சனைகள் வந்து, உடல் எடை மெலிந்து மிக மோசமான நிலையை அடைந்தார்.
என்ன சிகிச்சை
அதுபோல் இவருக்கு வயிற்றில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அவர் வெளிநாடு சென்று சில ஆப்ரேஷன்களை மேற்கொண்டார். இதற்காக இப்போதும் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
மோசம்
இந்த நிலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பெரிய வைரலாகி உள்ளது. மொத்தமாக உடல் மெலிந்து மிக மோசமாக இவர் இந்த புகைப்படத்தில் காணப்படுகிறார். பார்ப்பதற்கு ஒரு நொடி அடையாளமே தெரியாத அளவிற்கு அவர் காணப்படுகிறார்.
பலர் கேள்வி
இவரின் புகைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலர் அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ராணா உங்களுக்கு என்ன ஆச்சு,. ஏன் இப்படி ஒல்லியா இருக்கீங்க? என்னதான் நடக்குது? என்று பலர் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











