என்னங்க சொல்றீங்க.. உண்மைதானா.. பிரபாஸுக்கும் கிருத்தி சனோனுக்கும் நிச்சயதார்த்தமா?
சென்னை : பாகுபலி படப்புகழ் பிரபாஸூம், நடிகை கிருத்தி சனோனும் காதலித்து வருவதாக கிசு கிசுக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் பிரபாஸ் 42 வயதாகியும் இன்னும் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார்.
பாகுபலி படம் வெளியான போது, இவரின் நடிப்பையும், கட்டுமஸ்தான உடலையும் பார்த்த ரசிகைகள் இவரை திருமணம் செய்து கொள்ள காத்திருந்தார்கள்.

பாகுபலி ஹீரோ பிரபாஸ்
எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டிக்கு நல்ல பொருத்தம் இருந்தது. அந்த படத்தில் நடித்த போது இருவரும் காதலித்ததாக தகவல் பரவியது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சாஹோ படத்திலும் அனுஷ்காவின் பெயரை பிரபாஸ் சிபாரிசு செய்திருந்தார். ஆனால், அனுஷ்கா, அப்போது குண்டாக இருந்ததால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கை நழுவி போனது.

ஆதிபுருஷ்
தற்போது நடிகர் பிரபாஸ் இயக்குனர் ஓம் ராவுத்தின் ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், வீடியோகேமில் வரும் கேரக்டர்களைப்போல காட்சி இருப்பதாக கூறி நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

5 மொழிகளில்
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தி திரைப்படமாக இப்படம் வெளியாக உள்ளது. ஆதிபுருஷ் படம் ஜனவரி 12ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கிராபிக்ஸ் பிரச்சனையால் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16ந் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்
இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தில் ராமராகவும், சீதாவாகவும் நடித்துள்ள பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோனும் காதலிப்பதாகவும் இருவரும் அவ்வப்போது டேட்டிங் சென்று வருவதாகவும் தகவல் பரவி வரும் நிலையில், பிரபல வெளிநாட்டு தணிக்கை வாரிய உறுப்பினரும் திரைப்பட விமர்சகருமான உமர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில், அடுத்த வாரம் பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோனுக்கு மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது என் ட்விட் செய்துள்ளார். இணையத்தில் இந்த செய்தி டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











