twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாகுபலி அளவுக்கு இல்லை.. வம்பிழுத்த டோலிவுட் ரசிகர்கள்.. திருப்பியடித்த PS1 ஃபேன்ஸ்!

    |

    சென்னை: தெலுங்கு சினிமாவையே உலக அரங்கில் நிறுத்திய படம் ராஜமெளலியின் பாகுபலி.

    அதே போல தற்போது தமிழ் சினிமாவின் பெருமையாக உருவாகி உள்ள மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    ஆனால், சில டோலிவுட் ரசிகர்கள் பாகுபலி அளவுக்கு பொன்னியின் செல்வன் இல்லை என ட்ரோல் செய்ய ஆரம்பிக்க ட்விட்டர் சண்டை வெடித்துள்ளது.

    Ponniyin Selvan 1 Review: மணிரத்னம் மேஜிக் வொர்க்கவுட் ஆனதா.. பொன்னியின் செல்வன் விமர்சனம்! Ponniyin Selvan 1 Review: மணிரத்னம் மேஜிக் வொர்க்கவுட் ஆனதா.. பொன்னியின் செல்வன் விமர்சனம்!

    எது பெஸ்ட்

    எது பெஸ்ட்

    பொன்னியின் செல்வனா? பாகுபலியா? எந்த படம் பெஸ்ட் என்கிற சண்டையை சோஷியல் மீடியாவில் ஹாஷ்டேக் பாகுபலியுடன் ஆரம்பித்துள்ளனர் சில டோலிவுட் ரசிகர்கள். இரண்டு படங்களும் பெரிய படங்கள் தான் என்றும், பொன்னியின் செல்வன் தமிழர்களின் பெருமை என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

    பாகுபலி தான் பெஸ்ட்

    பாகுபலி தான் பெஸ்ட்

    பாகுபலி படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால், அந்த பிரம்மாண்டம் பொன்னியின் செல்வன் படத்தில் காட்சிகளாக கடக்கவில்லை என தெலுங்கு சினிமா ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி தான் எப்பவுமே பெஸ்ட் என்றும் ட்வீட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

    பொன்னியின் செல்வன் காப்பி

    பொன்னியின் செல்வன் காப்பி

    முதலில் பாகுபலியின் பல கூஸ்பம்ப்ஸ் ஆன காட்சிகளே பொன்னியின் செல்வன் கதையில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது தான். இது உண்மையான சோழர்களின் வரலாற்று படம் முழுக்க முழுக்க பாகுபலி போல கற்பனை படம் அல்ல, இரண்டையும் கம்பேர் செய்வதே சரியாகாது என ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    குப்பை படம்

    குப்பை படம்

    பொன்னியின் செல்வன் படத்துடன் அந்த குப்பை படம் பாகுபலியை கம்பேர் பண்ணாதீங்க என தெலுங்கு ரசிகர்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதே சமயம் ஏகப்பட்ட டோலிவுட் ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படம் தரமா இருக்கு, பாகுபலி உடன் ஒப்பிட்டு சண்டை போடுவதை விட்டு விட்டு சினிமாவை கொண்டாடுங்கள் என ஆதரவு அளித்து வருகின்றனர்.

    கிங் மேக்கர்கள்

    கிங் மேக்கர்கள்

    இயக்குநர் ராஜமெளலி மற்றும் இயக்குநர் மணிரத்னம் இருவருமே கதை சொல்வதிலும், காட்சிகளை அமைப்பதிலும் தாங்கள் கிங் மேக்கர்கள் என்பதை திரையில் நிரூபித்து காட்டி உள்ளனர். ரசிகர்கள் தேவையில்லாத சண்டையை போடுவதை விட்டு விட்டு டிக்கெட் கிடைத்ததும் தியேட்டரில் போய் படத்தை பாருங்கள், நிச்சயம் ஏமாற மாட்டீர்கள் என சமாதானப்படுத்தி வருகின்றனர்.

    English summary
    Bahubali vs Ponniyin Selvan comparison leads Telugu and Tamil fans fight in social media. Cinema lovers told not to compare both the movies, they are different genre movies and both the directors done their best.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X