ஜனநாயகன் லீக்.. கைதான 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
சென்னை: எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் வெளியானது. இதுகுறித்து படக் குழுவினர் அளித்த புகாரால் கைதான 9 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால், சென்சார் பிரச்சனை காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பின் படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் அனுப்பியது. மறு தணிக்கை குழு படத்தை பார்த்துவிட்டு சில மாற்றங்களை செய்யும்படி பரிந்துரை செய்து இருந்தனர்.

ஜனநாயகன் லீக்: மேலும், படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள், வசனங்கள் இருப்பதால், தேர்தல் ஆணையம் படத்தை பார்க்க பரிந்துரை செய்தது. இதனால், தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு, ஏப்ரல் 24ந் தேதி அல்லது ஏப்ரல் 30ந் தேதி படம் வெளியாகும் அனைவரும் எதிர்பார்த்த நிலையில், முதலில் படத்தின் 5 நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியானது. அதைத்தொடர்ந்து அதிகாலை ஜனநாயகன் படத்தின் மூன்று மணிநேர முழு படமும் இணையத்தில் வெளியானது.
தடை செய்யுங்கள்: ஜன நாயகன் லீக்கானதால் வேதனை அடைந்த எச் வினோத்,
ஒவ்வொரு காட்சியும் யாரோ ஒருவரின் கனவு. இப்படியான கசியவிடுவது ஒரு படத்தை மட்டுமல்ல, முழு தமிழ் திரையுலகையும் பாதிக்கிறது. தேவையற்ற சதி கதைகளை பேசாதீர்கள், லீக் வீடியோக்களை ட்விட்டர், ரீல்ஸ் போன்றவற்றில் பகிராதீர்கள். சினிமாவை சரியான முறையில் ஆதரிக்கவும். இப்படியான செயல்கள் தமிழ் சினிமாவின் வருமானத்தையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்றார்.
ஜாமீன் மனு தள்ளுபடி: இந்த சம்பவம் வன்மையாக கண்டித்து நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர்கள் அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து கே.வி.என். நிறுவனம் அளித்த புகாரின் பேரில் 9 பேரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் கைதான 9 பேரும் ஜாமின் மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணைக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்


Click it and Unblock the Notifications