»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்த நடிகர் மன்சூர்அலிகானுக்குஜாமீன் வழங்கப்பட்டது.

நடிகர் மன்சூர்அலிகான் தன்னிடம் உதவியாளராக இருந்த சிநேகா என்ற இளம்பெண்ணுக்கு மயக்கமருந்து கொடுத்து கற்பழித்ததாக அவர் மீது வழக்குதொடரப்பட்டது.

இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ 3 லட்சத்து 25ஆயிரம் அபராதமும் விதித்து முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்பளித்தது. இதைத்தொடர்ந்து மன்சூர்அலிகான் சிறையில் அடைக்கப்பட்டார்.

மன்சூர்அலிகான் தனக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மனு மீதான விசாரணை முடியும்வரை தன்னை ஜாமீனில் விடவேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மலை சுப்ரமணியம்.முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம்விதித்த அபராதத் தொகையை செலுத்தினால் மன்சூர்அலிகானை ஜாமீனில்விடுவதுபற்றி பரிசீலிக்கப்படும் என்றார்.

இதையடுத்து மன்சூரின் சார்பில் ரூ. 3 லட்சத்து 25 ஆயிரம் முதன்மை செஷன்ஸ்நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

பணம் செலுத்தப்பட்ட விவரத்தை மன்சூரின் வழக்கறிஞர் நீதிபதியிடம் கூறினார்.இதன் பின் மன்சூர்அலிகானை ரூ 50,000 ஆயிரம் சொந்த ஜாமீனிலும், அதேதொகைக்கு இரு நபர் ஜாமீனிலும் விட நீதிபதி உத்தரவிட்டார்.

Read more about: actor, chennai, mansooraligan, tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil