Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- News
"சலங்கை ஒலி" இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்.. சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இப்படி ஒரு வில்லங்கம் இருக்கா?வணங்கான் ட்ராப்புக்கு காரணமே பாலா தான்..பயில்வான் ரங்கநாதன் தாக்கு!
சென்னை : வணங்கான் படம் ட்ராப் ஆனதற்கு முழுக்காரணமும் பாலா தான் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்
இயக்குநர் பாலாவும், நடிகர் சூர்யாவும் நீண்ட ஆண்டுகளுக்கு பின் வணங்கான் படத்தில் இணைந்தனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டன.
ஆனால், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குநர் பாலாவின் பிறந்தநாள். அன்று வணங்கான் படத்தின் டைட்டில் லுக் வெளியாகி டிராண்டானது.
'வணங்கான்' சூர்யாவுக்கு பதில் அதர்வா?..பாலா எடுத்த அதிரடி முடிவு !

பாலா அறிக்கை
இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இயக்குநர் பாலா ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா.

சூர்யா விலகுகிறார்
இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. நந்தாவில் பார்த்த சூர்யா, பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் என அறிக்கை வெளியிட்டு ரசிகர்களை சங்கடத்தில் ஆழ்த்தினார்.

பாலாதான் காரணம்
இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளரும், திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், வணங்கான் திரைப்படம் ட்ராப் ஆனத்திற்கு முழுக்காரணம் பாலா தான் என்றார். பாலாவிற்கு எந்த அளவுக்கு புத்திசாலித்தனமும், திறமையும் இருக்கிறதோ அதை விட அதிகமாக திமிர்பிடித்த தனமும் மூர்க்கத்தனம் அவருக்கு அதிகவே இருக்கிறது என்பது சினிமாவில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.

சேது தயாரிப்பாளர் சொத்துக்களை இழந்தார்
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பவர் பாலா, அவர் இயக்கிய அனைத்து படங்களுமே அவருக்கு பெயர் கிடைக்கும், விருதும் கிடைக்கும். ஆனால், இவர் இயக்கிய படங்களின் தயாரிப்பாளர்களுகள் பெரும் நஷ்டத்தை சந்திப்பார்கள். இதற்கு உதாரணம் பாலா இயக்கி சேதுபடம் மிகப்பெரிய வெற்றி ஆனால், சேது படத்தின் தயாரிப்பாளர் சொத்துக்களை இழந்து இப்போது அனாதையாக இருக்கிறார்.

இருவருக்கும் இடையே மோதல்
சூர்யாவை ஒரு நட்சத்திர அந்தஸ்துக்கு கொண்டு வந்தவர் பாலா, அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் வணங்கான் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. வணங்கான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு நடைபெற்றது. இதையடுத்து,இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் போது சூர்யாவுக்கும் பாலாக்கும் இடையே பிரச்சனை தொடங்கியது. படப்பிடிப்பின் போது காலையில் இருந்து மாலை வரை சூர்யாவை ஓடவிட்டுள்ளார் பாலா. இதனால், பாலா மீது கோபத்தில் இருந்துள்ளார் சூர்யா.

இப்படி ஒரு வில்லங்கம் இருக்கா?
அது மட்டும் இல்லாமல், வணங்கான் பட நடிகை க்ரித்தி ஷெட்டிக்கு படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகே ரூம் போட்டுள்ளார். மேலும், நடிகைக்கு பக்கத்திலேயே பாலாவுக்கும் ரூம் போட்டுள்ளார். ஆனால், சூர்யாவுக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் ரூம் போட்டுக் கொண்டுள்ளார். இப்படி பாலாவினால் அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்சனைகளால் தான் வணங்கான் படப்பிடிப்பு ட்ராம் ஆனது.

புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்
சூர்யா இல்லாமல் வேறு நடிகர்களை வைத்து வணங்கான் படத்தை பாலா இயக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. சூர்யா ஒரு சிறந்த நடிகர் இவரே பாலாவிடம் தாக்குபிடிக்க முடியாத போத மற்றவர்களின் நிலைமையை என்ன சொல்வது என பயில்வான் ரங்கநாதன் பாலா பற்றி புட்டு புட்டு வைத்தார்.