Senthil :எம்.எல்.ஏ சீட்டை நிராகரித்த நடிகர்.. செந்திலின் மறுபக்கம்.. பயில்வான் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
சென்னை : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போனவர் மூத்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன்.
இவர் பல நடிகர், நடிகைகள் குறித்த ரகசியங்களை பேசி வம்பில் மாட்டிக்கொள்வார். சில நேரம் பல சுவாரசியமான விஷயங்கள் குறித்து பேசுவார்.
அந்த வகையில் இன்று நடிகர் செந்தில் பற்றி யாருக்கும் தெரியாத பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

சாராயக்கடையில் : அதில், நடிகர் செந்தில் எந்தவித பின்புலமும் இல்லாமல் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்தவர். இவர் சென்னை தேனாம்பேட்டையில் இருந்த சாராயக்கடையில்,சாராயம் எடுத்துக் கொடுக்கும் உதவியாளராக வேலைப்பார்த்து வந்தார். அந்த கடைக்கு பல நடிகர்கள் வருவார்கள். அப்படி செந்திலுக்கு பழக்கம் ஆனவர்தான் நடிகர் கவுண்டமணி.
ரூபாய் நோட்டு எண்ணத் தெரியாது : செந்தில் யாரையும் எதிர்த்து பேச மாட்டார், அனைவர் இடத்திலும் பணிவாக நடந்துகொள்வார். அதே போல ரூபாய் நோட்டு எண்ணத் தெரியாது, அவர் சினிமாவிற்கு வந்த புதிதில்,தயாரிப்பாளர்கள் செக் கொடுத்தால், அண்ணா எனக்கு பேங்கில் அக்கவுண்ட் இல்லை என்று சொல்லி ரொக்கமாகத்தான் பணத்தை வாங்குவார். அப்படி வாங்கிய பணத்தை அவர் நிலத்தில் முதலீடு செய்தார்.
இருவருக்கும் சண்டையா : கவுண்டமணியும் செந்திலும் தமிழ் சினிமாவில் 70க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்து நகைச்சுவையில் கலக்கி வந்தனர். எப்போதுமே, கவுண்டமணியிடம் அடிவாங்கும் விவரம் தெரியாதவராக செந்தில் நடித்து இருப்பார். இடையில் சில படங்களில் செந்தில் தனியாக காமெடி செய்தார். இருவருக்கும் சண்டை அதனால் பிரிந்து விட்டார்கள் என்றெல்லாம் பேச்சு எழுந்தது. அதில் துளியும் உண்மை இல்லை.

சண்டை இல்லை : கவுண்டமணியன் கதாநாயகனாக நடித்த இரண்டு படங்கள் வெற்றி பெற்றுவிட்டதால், இனி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று முடிவெடித்த கவுண்டமணி இரண்டு ஆண்டுகள் வீட்டில் பட வாய்ப்பு இல்லாமலே இருந்தார். இந்த நேரத்தில் தான் செந்தில் தனி காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார். மற்றபடி கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் எந்த சண்டையும் இல்லை.
அதிக ரசிகர்கள் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட செந்திலுக்குத்தான் வெளிநாட்டில் அதிக ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் இருக்கிறார்கள். நடிகர் சங்கம் நன்கொடை வசூலித்த போது அதிகமான நன்கொடை வசூலித்து கொடுத்தவர் நடிகர் செந்தில் தான். அந்த அளவுக்கு அனைவர் இடத்திலும் அன்பு காட்டக்கூடியவர் நடிகர் செந்தில்.
அதிமுகவில் இணைந்தார் : இதைவிட ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு செந்தில் என்றால் மிகவும் பிடிக்கும், அவரைப்பார்த்தாலே வாய்விட்டு சிரிப்பார் ஜெயலலிதா. இதனால், அதிமுகவில் சேர்ந்த செந்தில், நட்சத்திர பேச்சாளராக இருந்து புயல் வேகத்தில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார்.

எம்.எல்.ஏ சீட்டை நிராகரித்தார் : செந்தில் மீது ஜெயலலிதாவுக்கு இருந்த மரியாதையால் முதுகுளத்தூர் தொகுதி அல்லது அதற்கு பக்கத்து தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுங்கள் என்றார். இதை மறுத்ததால் தான் நடிகர் கருணாஸ் அண்ணா திமுகாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்று மட்டும் செந்தில் சரி என்ற சொல்லி இருந்தால் கருணாஸ் அதிமுக கூட்டணிக்கு வரவாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கும் சசிக்கலாவிற்கும் பிடித்தமானவர் செந்தில்.
கிசுகிசுவில் சிக்காதவர் : ஜெயலலிதா இறந்த பிறகு தினகரன் கட்சியில் சிறிது காலம் இருந்த செந்தில் தற்போது பாஜகவில் சேர்ந்துள்ளார். செந்தில் யாருடைய மனதையும் நோக அடிக்க மாட்டார். அனைவர் இடத்திலும் அன்பாக பழகக்கூடிய செந்தில், இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்த போது இதுவரை எந்த கிசுகிசுவிலும் சிக்கியது இல்லை. மனைவி சொல்லே மந்திரம் என இருப்பவர் செந்தில் என்று பயில்வான் ரங்கநாதன் அவர் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











