twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பைரவா நஷ்டம் ரூ 14 கோடி... கொடுக்கவில்லை எனில் அடுத்த படம் வேணாம்'! - விநியோகஸ்தர்கள்

    By Shankar
    |

    மூன்று நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த வெற்றிப்படம் என விளம்பரம் செய்து கோடம்பாக்கத்தில் மற்ற ஹீரோக்களுக்கு பயத்தை ஏற்படுத்திய படம் பைரவா. நடிகர் விஜய் அவரது திரையுலக வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கிய படமும் அதுதான். கதாநாயகி கீர்த்தி சுரேஷ் நடித்த எந்த படமும் லாபகரமாக ஓடாத நிலையில் விஜய் விரும்பியதால் ஒரு கோடி சம்பளம் கொடுத்து நடிக்க வைக்கப்பட்டார் பைரவர படத்தில்.

    அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இப்படத்தை இயக்கி இருந்தார். தமிழ் திரைப்பட துறையில் பாரம்பர்யம் மிக்க விஜயா வாஹினி நிறுவனம் சுமார் 70 கோடி பட்ஜெட்டில் தயாரித்த பைரவா படம் தமிழ்நாடு தியேட்டர் உரிமை 55 கோடிக்கு விற்க்கப்பட்டது. சூப்பர் ஹிட்டானதெறி படம் தமிழகத்தில் 48 கோடி ரூபாய் வருவாயாக பெற்றிருந்த நிலையில், பைரவா 55 கோடி என்பது அதிகம் என்றனர் விநியோகஸ்தர்கள். போட்டிக்கு பெரிய ஹீரோக்கள் நடித்த படங்கள் ரீலீஸ் ஆகாத நாளில் பைரவா படம் ரீலீஸ் செய்யப்பட்டது.

    Bairava loss Rs 14 cr - Distributors claim

    தமிழ்நாடு முழுவதுமதியேட்டர்களில் பைரவா படம் திரையிட கடும் போட்டி நிலவியது. இதனால் பெரும்பான்மையான தியேட்டர்களில் எம்.ஜி அடிப்படையில் படம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் அட்வான்ஸ், எம்.ஜி என கொடுக்கப்பட்ட தொகை மொத்த தொகையாக கூட வசூல் ஆகவில்லையாம்.

    கூட்டிக் கழித்துப் பார்த்தால், பைரவா படம் மூலம் தமிழ்நாட்டில் 14 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.

    "விஜய் என்கிற நடிகரின் படத்துக்கு தமிழ்நாட்டில் ஆகும் அதிகபட்ச தொகைக்கு கூடுதலாக பைரவா படம் விற்கப்பட்டதே காரணம்", என்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற தமிழ் நாடு திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பு கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அனைத்து முன்ணனி ஹீரோக்கள் நடித்து வெளியான படங்களும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன. ஹீரோக்கள் தங்கள் தகுதிக்கு மீறி வாங்கும் சம்பளம், அதனால் உயரும் பட்ஜெட் இதனால் படத்தின் விலை கூடுதலாக்கப்படுகிறது. இதற்கு பிரதான காரணகர்த்தாவாக இருக்கும் நாயக நடிகர்களிடம் படத்தின் நஷ்ட தொகையை ஈடுகட்டுமாறு கேட்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    "முதற்கட்டமாக பைரவா படத்தில் ஏற்பட்ட நஷ்டம் 14 கோடியை தயாரிப்பு நிறுவனமான விஜயா வாஹினி திரும்ப தர வேண்டும். அவர்கள் எங்களுக்கும் நஷ்டம் என கூறினால் நாயகன் விஜய் தன் சம்பளத்தில் 14 கோடியை திரும்ப தர வேண்டும். இல்லை எனில் அவர் கதாநாயகனாக நடித்து வரும் அடுத்த படத்தினை விநியோகஸ்தர்கள் வாங்கக் கூடாது. தியேட்டர்களில் படம் திரையிட கூடாது," என தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

    English summary
    The Tamil Nadu distributors have decided not to buy Vijay movies till he settle the loss of Bairava.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X