»   »  பைரவா டீசர்... பார்த்தவர்கள் ரியாக்ஷன்!

பைரவா டீசர்... பார்த்தவர்கள் ரியாக்ஷன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது படங்களை ரிலீஸ் செய்ய தீபாவளி தினத்தைத்தான் பெரும்பாலும் விஜய் குறி வைப்பார். ஆனால் இந்த முறை ஜஸ்ட் மிஸ்ஸாகிவிட்டது பைரவா.

இரண்டு மாதங்கள் தள்ளி பொங்கலுக்கு வெளியாகிறது. ஆனாலும் தீபாவளி நாளின் கொண்டாட்டத்தில் தனது படமும் இருக்க வேண்டும் என்பதால், படத்தின் டீசரை நேற்று மாலையே வெளியிட்டுவிட்டார்.


Bairava teaser reactions

இந்த டீசர் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.


முதலில் நெகடிவ் விமர்சனங்கள்...


பலரும் சொன்ன கருத்து, விஜய்யின் வசன உச்சரிப்பு இன்னமும் 'ஐயாம் வெயிட்டிங்', 'அந்த பயம் இருக்கட்டும்' ஸ்டைலிலேயே தொடர்வது.


'இந்த டீஸரைப் பார்க்கும்போது ஏனோ வேட்டைக்காரனும், சுறாவும் நினைவுக்கு வருகின்றன' என்கிறார் ஒரு ரசிகர்.


அடுத்து ப்ளஸ் பாயின்டுகளுக்குப் போகலாம்...


ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் பாராட்டித் தள்ளியுள்ளனர் இந்த ட்ரைலரை. முக்கியமானவர்கள், சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி. ட்ரைலர் பக்கா மாஸ் என்பதுதான் இவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்து.'தெரிஞ்ச எதிரியைவிட தெரியாத எதிரிக்குதான் அல்லு அதிகமா இருக்கணும்!'


'நீ என்ன பெரிய வசூல் மன்னனா?'


'தெர்ல... அப்படித்தான் பேசிக்கிறாங்க'


-இந்த பஞ்ச் வசனங்கள் விஜய் ரசிகர்களை ஏகத்துக்கும் குஷிப்படுத்தியுள்ளது, அவர்களின் ரியாக்ஷனில் தெரிகிறது.


டீசரை இப்படி முடித்திருக்கிறார்கள்...


'எப்ப வரும்னு சொல்லணுமா?'

English summary
Here is the fans and VIP's reactions for Vijay's 60th movie Bairava teaser.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil