»   »  6 நாட்களில் 6 மில்லியன் பேர் பார்த்த பைரவா ட்ரைலர்!

6 நாட்களில் 6 மில்லியன் பேர் பார்த்த பைரவா ட்ரைலர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் பைரவா ட்ரைலர் அவரது கேரியரில் புதிய சாதனைப் படைத்துள்ளது. ஆறு நாட்களில் 6 மில்லியன் பார்வைகளுக்கு (Visits) மேல் இந்த ட்ரைலர் பெற்றுள்ளது. 2 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.

இதற்கு முன் விஜய் நடித்த தெறி படம்தான் அதிக பார்வைகளைப் பெற்றிருந்தது. அந்த ட்ரைலர் 11 மில்லியன் பார்வைகளைப் பெற்றது (தமிழ்ப் படங்களில் அதிக பார்வைகள் பெற்றுள்ள படம் ரஜினியின் கபாலிதான். மொத்தம் 33 மில்லியனுக்கும் அதிகம்).


Bairava trailer gets 6.25 million visits

அதற்கு அடுத்து இப்போது பைரவா ட்ரலருக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி வெளியான இந்த ட்ரைலர் கடந்த 6 நாட்களில் 6.25 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அத்துடன் 2.22 லட்சம் விருப்பங்களைப் பெற்றுள்ளது. 23 ஆயிரம் பேர் இந்த ட்ரைலர் பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.விஜயா புரொடக்ஷன்ஸின் இந்த பைரவா படம் இன்னும் 6 நாட்களில் வெளியாகவிருக்கிறது.

English summary
Vijay's Pongal release Bairava has got 6.25 million visits in youtube.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil