ரிலீஸான நான்கே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த விஜய்யின் பைரவா?
சென்னை: விஜய்யின் பைரவா படம் ரிலீஸான நான்கே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த 12ம் தேதி 55 நாடுகளில் பிரமாண்டமாக ரிலீஸானது. படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ. 16.61 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ரிலீஸான அன்று சென்னையில் மட்டும் பைரவா ரூ. 92 லட்சம் வசூல் செய்தது. இந்நிலையில் படம் ரிலீஸான நான்கே நான்கு நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக நாளிதழ்களில் விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது.
திரையிட்ட நான்கு நாட்களில் 100 கோடி வசூலை தாண்டிய வெற்றி படம் பைரவா என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விஜய்யின் கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி எண் 150ம் ரிலீஸான நான்கு நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தி ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடித்தார்.


Click it and Unblock the Notifications











