விஜய் 62 படத்தில் 'பைரவா' மேஜிக்?
சென்னை: விஜய் 62 படத்தில் பைரவா கூட்டணி அமைய உள்ளதாம்.
கத்தி, துப்பாக்கி படங்களை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ், விஜய் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ள படம் விஜய் 62. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

விஜய்க்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிப்பார் என்று முதலில் செய்திகள் வெளியாகின. அதன் பிறகு பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்பு அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கீர்த்தியும், விஜய்யும் ஏற்கனவே பைரவா படத்தில் ஜோடி சேர்ந்தனர்.
கீர்த்தி தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications