twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தின் பின்னால் பெரும் உழைப்பு உள்ளது - பாக்யராஜ்

    |

    சென்னை: நியாமான பவித்தரமான ஆசையாக இருந்தால் அது நிச்சயம் நிறைவேறும். அதுவே கலைஞானம் அவர்களின் பைரவி திரைப்படம் மூலம் நிறைவேறியது. இன்று நாம் அவரை சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுகிறோம் என்று பாக்யராஜ் பேசினார்.

    திரையுலகில் புகழ்பெற்ற கதாசிரியர் திரு.கலைஞானம் அவர்களுக்கு தமிழ் இலக்கிய பேரவை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் 70 ஆண்டு கால சேவையை போற்றும் விதமாக ஒரு பாராட்டு விழா நடைபெற்றது.

    Bairavi Producer Kalaignanam Function Bhagyaraj speech

    இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் திரு.கடம்பூர் ராஜு, திரு.விஜயபாஸ்கர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் பாரதிராஜா, பாக்கியராஜ், சிவகுமார், கவிஞர் வைரமுத்து, கே.ஆர்.விஜயா, நக்கீரன் கோபால், கேயார், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, கலைப்புலி எஸ்.தாணு, அமீர், ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சுசீந்திரன், மனோபாலா மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு கதை மன்னரின் பாராட்டு விழாவை சிறப்பித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் பல்வேறு மகிழ்வுறும் நிகழ்வுகள் இடம்பெற்று பார்வையாளர்களை நெகிழ்ச்சி அடையவைத்தன. பெரும்பாலான விருந்தினர்கள் கலைஞானத்தின் கலையுலக வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றி பாராட்டி பேசினார். இயக்குனர் பாக்யராஜ் பேசும் போது கலைஞானத்திற்கும் அவருக்கும் இடையே நிகழ்ந்த பல நெகிழ வைக்கும் சம்பவங்களை குறிப்பிட்டு பேசினார்.

    அன்றாட வாழ்வில் நடைபெறும் சம்பவங்களை எப்படி கதையாக கலைஞானம் வடிவமைப்பார் என்பதை பற்றி அழகாக விளக்கி கூறினார். அவருக்கு இருக்கும் நடிப்பு ஆர்வத்தை பற்றியும் அது எப்படி தன்னுடைய படமான இது நம்ம ஆளு படம் மூலம் நிறைவேறியது என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், கலைஞானம் அவர்களுக்கு நடிப்பு மீது ஆர்வம் இருந்ததோ, அதைப் போலவே நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கும் நடிப்பின் மீதும், தாம் எதிர்காலத்தில் ஒரு பெரிய நடிகராக வருவேன் என்ற நம்பிக்கை இருந்திருக்கும்.

    நியாயமான பவித்தரமான ஆசையாக இருந்தால் அது நிச்சயம் நிறைவேறும். அதுவே கலைஞானம் அவர்களின் பைரவி திரைப்படம் மூலம் நிறைவேறியது. இன்று நாம் அவரை சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுகிறோம். அதற்காக அவர் எவ்வளவு பாடுபட்டு உழைத்தார் என்பதை நான் அவருடைய 16 வயதினிலே படத்தில் இருந்து பார்த்து வருகிறேன் என்றார்.

    16 வயதினிலே திரைப்படத்தின் போது அந்த படத்தின் இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு துணை இயக்குனராக பணிபுரிந்த போது ரஜினி எப்படி தன்னை ஒவ்வொரு இடத்திலும் மெருகேற்றிக் கொண்டார் என்பதை நான் நேரடியாகவே பார்த்துள்ளேன். அவர் இன்று திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு பின்னால் பெரும் உழைப்பு உள்ளது என்று ரஜினியைப் பற்றி புகழ்ந்து பேசினார். உச்சியில் இருந்தாலும் அதை அடைவதற்கு தன்னம்பிக்கையும், உழைப்பும் நிச்சயம் அவசியம் என்பதற்கு சூப்பர்ஸ்டார் ஒரு எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.

    English summary
    A legitimate desire, a sacred desire, is certainly fulfilled, said K.Bhagyaraj in Kalaignanam appreciation ceremony.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X