சுந்தரா டிராவல்ஸ் ராதா பஞ்சாயத்து.. வைர வியாபாரியைக் காணோமாமே....!

By Sudha

சென்னை: நடிகை சுந்தரா டிராவல்ஸ் ராதா வழக்கில் புதிய திருப்பமாக அவரால் குற்றம் சாட்டப்பட்டுள்ள வைர வியாபாரியும், தயாரிப்பாளருமான பைசூலைக் காணவி்ல்லை என்று போலீஸார் கூறுகின்றனர்.

அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாம். அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.

அவர் தலைமறைவாகியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். விசாரணைக்கு வருமாறு கூப்பிட்டும் பைசூல் வரவில்லையாம்.

அடாவடி நாயகி ராதா

அடாவடி நாயகி ராதா

அதாவது சுந்தரா டிராவல்ஸ் படத்தில் அறிமுகமானவர் ஆந்திரத்து ராதா. இவர் பின்னர் அடாவடி, மானஸ்தன் என சில படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பிலிருந்து மாயம்

நடிப்பிலிருந்து மாயம்

அதன் பின்னர் அவர் நடிப்பிலிருந்து மாயமாகி விட்டார். இடையில் எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை.

திடீரென பரபரப்புப் புகார்

திடீரென பரபரப்புப் புகார்

இந்த நிலையில்,சில தினங்களுக்கு முன்பு திடீரென பரபரப்புப் புகாருடன் வெளியுலகத்திற்குத் திரும்பினார் ராதா.

ஏமாத்திட்டார்...

ஏமாத்திட்டார்...

சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியைச் சேர்ந்த பைசூல் என்ற தயாரிப்பாளர் மற்றும் வைர வியாபாரி மீது பரபரப்பு பாலியல் புகாரைக் கூறினார். 6 வருடமாக குடும்பம் நடத்தினார், ரூ. 50 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டார். ஆபாசப் படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுகிறார் என்று சரமாரியாக புகார்களைக் கூறினார்.

ராதா என்ன யோக்கியமா... பைசூல் பதிலடி

ராதா என்ன யோக்கியமா... பைசூல் பதிலடி

பதிலுக்கு பைசூலும் அதிரடியாக புகார்களை அடுக்கினார். ராதா மட்டும் என்ன யோக்கியமா. அவர் பலரைத் திருமணம் செய்துள்ளார். என்னை அவர்தான் மோசடி செய்து விட்டார் என்று கூறியிருந்தார்.

போலீஸில் ஆதாரத்துடன் புகார்

போலீஸில் ஆதாரத்துடன் புகார்

இந்த நிலையில் ராதா தன் தரப்பு ஆதாரங்களுடன் போலீஸில் புகார் கொடுத்தார். அவரை போலீஸாரும் விசாரித்துள்ளனர்.

பைசூல் எங்கே

பைசூல் எங்கே

இந்த நிலையில் பைசூலையும் விசாரணைக்கு வருமாறு போலீஸார் அழைத்துள்ளனர். ஆனால் அவரைத்தான் காணவி்ல்லை. விசாரணைக்கு அவர் வரவில்லை.

போன் சுவிட்ச் ஆப்

போன் சுவிட்ச் ஆப்

அவரது போனைத் தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் என்று வருகிறதாம். அவர் தலைமறைவாகியிருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X