எதுவும் தெரியாமல் பேசாதீங்க.. ஆதாரத்தை காட்டுங்க..3 நாள் தான் டைம்.. அமீரை எச்சரித்த மோகன் ஜி!

சென்னை : பகாசூரன் திரைப்படம் கடந்த வாரம் தியேட்டரில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அனைத்து விமர்சனங்களுக்கும் மோகன் ஜி கொஞ்சம்கூட அசராமல் பதில் அளித்து வருகிறார்.

பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி, நான்காவது படமாக பகாசூரன் படத்தை இயக்கி உள்ளார்.

இதில், பிரபல இயக்குனர் செல்வராகவன், நட்டி நட்ராஜ், ராதாரவி, தாரக்ஸி, கே.ராஜன், கூல் சுரேஷ், சசிலயா ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.

பகாசூரன்

பகாசூரன்

பகாசூரன் திரைப்படம் இன்றைய இளம் தலைமுறை பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் என சொல்லிவிட்டு, பெண்களின் ஒழுக்கம், பெண் கௌரவம், பெண்களுக்கு எதுவுமே தெரியாது என்பது போல அதீத பழைய எண்ண ஓட்டத்துடன், மிகவும் பிற்போக்குத் தனமாக பகாசூரன் படம் இருக்கிறது என பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மோகன் ஜிக்கு பின்னால் பாஜக

மோகன் ஜிக்கு பின்னால் பாஜக

பகாசூரன் படம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் அமீர், மோகன் ஜியின் படங்களை என்.ராஜா, அண்ணாமலை போன்றவர்கள் பார்த்து கருத்து கூறி வருகின்றனர். ஆனால், அசுரன், மெட்ராஸ், காலா, கபாலி படங்களைப் பார்த்து கருத்து கூறுவதில்லை என்றும், மோகன் ஜிக்கு பின்னால் பாஜக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

படம் பார்த்துவிட்டு பேசுங்கள்

படம் பார்த்துவிட்டு பேசுங்கள்

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மோகன் ஜி, இயக்குநர் அமீர் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார். எனக்கு பின்னால் பாஜக இருக்கிறது என்றும், எச் ராஜா உள்ளிட்டோர் இயக்குவதாகவும் கூறியிருக்கிறார். பகாசூரன் படம் தியேட்டரில் இரண்டாவது வாரம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இயக்குநர் அமீர் பகாசூரன் படத்தை பார்க்காமல் தவறான கருத்தை தெரிவித்த வருகிறார். தயவு செய்து படத்தை பார்த்துவிட்டு பேசுங்கள்.

கடன் வாங்கி படம் எடுத்தேன்

கடன் வாங்கி படம் எடுத்தேன்

நான் யாரிடமும் பணம் வாங்கிக்கொண்டு இந்தப் படத்தை இயக்கவில்லை. கடன் வாங்கி தான் படம் எடுத்தேன். இந்த படத்துக்கு நான் தான் தயாரிப்பாளர், நான் எந்தக் கட்சியை சார்ந்தவர்களிடமும் பணத்தை வாங்கி படம் எடுக்கவில்லை. எதுவுமே தெரியாமல் அமீர் இது போன்ற தவறான குற்றச்சாட்டினை முன்வைப்பது தவறு.

3 நாள் தான் டைம்..

3 நாள் தான் டைம்..

மூன்று நாட்களுக்குள் நீங்கள் சொன்னதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் இல்லையென்றால் இந்தக்கருத்திலிருந்து பின் வாங்கி கொள்ளுங்கள். தயவு செய்து இப்படி அபாண்டமாக ஒருவர் மீது குற்றம் சுமத்தாதீர்கள் என்று இயக்குநர் மோகன் ஜி அமீருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X