அஜித் சார் கூட போட்டோ எடுக்கவே பயமா இருக்கு.. அவரையும் தப்பா பேசிடுவாங்களோன்னு.. மோகன் ஜி பளிச்!

சென்னை: நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சார்ட் ரிஷியை வைத்து திரெளபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட 2 படங்களை எடுத்த இயக்குநர் மோகன் ஜி நடிகர் அஜித் கூட போட்டோ எடுக்கவே பயமா இருக்கு என சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது கோலிவுட்டையே பரபரப்பாக்கி உள்ளது.

செல்வராகவன், நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகி உள்ள பகாசூரன் படத்தை இயக்கி உள்ள மோகன் ஜி அந்த படத்தை ப்ரோமோட் செய்யும் விதமாக பல மீடியாக்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

தனுஷின் வாத்தி படம் வெளியாக உள்ள பிப்ரவரி 17ம் தேதியே தில்லாக அவர் அண்ணன் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் படத்தையும் ரிலீஸ் செய்கின்றனர்.

அண்ணன் தம்பி கிளாஷ்

அண்ணன் தம்பி கிளாஷ்

இந்த ஆண்டு பொங்கலுக்கு நண்பர்களான விஜய் மற்றும் அஜித் படங்கள் நேரடி மோதலில் ஜனவரி 11ம் தேதி வெளியானது. இந்நிலையில், தமிழ் சினிமாவில் அடுத்த போட்டியாக அண்ணன் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் திரைப்படமும் தம்பி தனுஷ் நடித்துள்ள வாத்தி படமும் ஒரே நாளில் பிப்ரவரி 17ம் தேதி மோத உள்ளது.

பகாசூரன் கதை

பகாசூரன் கதை

இளம் கல்லூரி மாணவிகளை டார்கெட் செய்து ஆபாச தொழிலில் ஈடுபட வைக்கும் கும்பலை செல்வராகவன் வதம் செய்யும் கதையாக பகாசூரன் உருவாகி உள்ளது. படத்தின் ஸ்னீக் பீக், ட்ரெய்லர் என அனைத்துமே ரசிகர்களை கவரும் வகையில் உள்ளதால் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அஜித் மச்சானை வைத்து

அஜித் மச்சானை வைத்து

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷியை வைத்து பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம் என மூன்று படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இந்த முறை இயக்குநர் செல்வராகவனை ஹீரோவாக வைத்து பகாசூரன் படத்தை இயக்கி உள்ளார்.

படம் பார்த்த ஷாலினி

படம் பார்த்த ஷாலினி


மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான திரெளபதி மற்றும் ருத்ர தாண்டவம் படங்களை தனது மகள் அனோஷ்காவுடன் தியேட்டருக்கு வந்து நடிகை ஷாலினி அஜித் பார்த்து விட்டு தனது முழு ஆதரவை சகோதரர் ரிச்சர்ட் ரிஷிக்கு கொடுத்துள்ள்ளார்.

ரிச்சர்ட் ரிஷி அழைத்தும்

ரிச்சர்ட் ரிஷி அழைத்தும்

அஜித்தின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பல முறை ரிச்சர்ட் ரிஷி என்னை அழைப்பார். ஆனால், நான் போகவே மாட்டேன். போகாமல் தவிர்த்து வர ஒரு முக்கிய காரணமும் உள்ளது என மோகன் ஜி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியது சினிமா துறையையும் ரசிகர்களையும் ஷாக் ஆக்கி உள்ளது.

அஜித் கூட போட்டோ எடுக்கவே பயம்

அஜித் கூட போட்டோ எடுக்கவே பயம்

நடிகர் அஜித்தின் தீவிர ரசிகன் நான், அவங்க வீட்டு விசேஷத்துக்கு சென்றால், நிச்சயம் தலயுடன் ஒரு போட்டோ எடுக்கணும்னு தோணும். ஆனால், அப்படி செய்தால் இங்கே இருக்கிறவனுங்க என்ன பேசுவானுங்களோ என்கிற பயத்தாலே அஜித் சார் கூட போட்டோ எடுக்கவும் இல்லை அவர் வீட்டு விசேஷத்திற்கும் போவதை தவிர்த்து வருகிறேன் என பேசி உள்ளார்.

அந்த எண்ணம் மாறும்

அந்த எண்ணம் மாறும்

சாதிய படங்களை எடுப்பவன் மோகன் ஜி என்கிற முத்திரை குத்தப்பட்டு இருக்கு. செல்வராகவன் சார் இந்த படத்தை கமிட் பண்ணதும் ஏகப்பட்ட ட்ரோல்கள் பறந்தன. வேண்டாம் சார் படத்தை விட்ரலாம் என்றே சொல்லிட்டேன். ஆனால், அவர் தான் நம்பிக்கை கொடுத்தார். நிச்சயம் பகாசூரன் படத்திற்கு பிறகு என் மீதான எண்ணம் ரசிகர்களுக்கு மாறும், அதன் பிறகு அஜித் சாருடன் இணைந்து போட்டோ எடுப்பேன், அவரை வைத்து படம் எடுக்கவும் ஆசையாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X