பகாசூரனில் சர்ச்சை எப்போது தெரியவரும்?.. தில்லாக விளக்கமளித்த இயக்குநர் மோகன் ஜி
சென்னை: பகாசூரன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் சர்ச்சை குறித்து அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி ஓபனாக பேசியிருக்கிறார்.
பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் இயக்குநரான மோகன் ஜி எதை பேசினாலும் சர்ச்சையாகும். அவரது பேச்சு மட்டுமின்றி அவர் எடுக்கும் படங்களும் தொடர்ந்து சர்ச்சைகளை சந்திப்பவை. குறிப்பாக அவர் இயக்கிய திரௌபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்கள் பட்டியலின மக்களையும், சிறுபான்மையின மதத்தினரையும் இழிவுப்படுத்துவது போல் காட்சிகள் இருந்ததாக பலர் விமர்சனத்தை முன்வைத்தனர்.

சமூக வலைதளங்களில் ட்ரோலாகும் மோகன் ஜி
விமர்சனங்களை சந்திப்பது மட்டுமின்றி கடுமையான ட்ரோலுக்கும் ஆளாவார் மோகன் ஜி. சமீபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் அளித்த பேட்டியில் அவர் பேசிய விஷயங்கள், பெண்கள் கல்லூரிக்கு சென்று யாரும் அழகான படத்தை சமூக வலைதளங்களில் டிபியாக வைக்காதீர்கள். அதனால்தான் பிரச்னைகள் உருவாகின்றன என பேசியது சோஷியல் மீடியாக்களில் பெரிதாகவே ட்ரோல் செய்யப்பட்டன.

பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் பகாசூரன் படம்
இப்படிப்பட்ட சூழலில் மோகன் ஜி புதிதாக பகாசூரன் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் நட்டி என்கிற நட்ராஜ், இயக்குநர் செல்வராகவன், தயாரிப்பாளர் கே.ராஜன், மன்சூர் அலிகான், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படமானது வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

வரவேற்பைப் பெற்ற பாடலும், ஸ்னீக் பீக்கும்
இந்த படத்தின் ட்ரெயலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் சூழலில் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஆனந்தம் கூத்தாடும் பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதேபோல் இன்று படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது. ஸ்னீக் பீக்கில் விபசார விடுதிக்கு செல்வராகவன் செல்வது போன்று காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டிருப்பதாக மோகன் ஜி ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பகாசூரன் சர்ச்சை குறித்து மோகன் ஜி விளக்கம்
இந்நிலையில் இந்தப் படமும் நிச்சயம் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று ஒருதரப்பினர் கூறிவருகின்றனர். இதுகுறித்து பேசிய மோகன் ஜி, "முந்தைய எனது படங்களைப் போலவே இதிலும் ஒரு கதைக்களம் இருக்கிறது. நான் மீண்டும் மீண்டும் சொல்லும் ஒரு விஷயம், பெற்றோர்களுக்குஜ்ம், இளம் பெண்களுக்கும், வாலிபர்களுக்கும் ஸ்மார் ஃபோனில் எந்த மதிரியான செயலிகள் ஆபத்தான வகையில் அமைந்துள்ளன.
அதிலிருந்து அவர்கள் தஙக்ளை தற்காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பகாசூரனில் பேசியிருக்கிக்றோம். படம் வாந்த பிறகே இந்தப் படத்தில் என்னென்ன சர்ச்சைகள் இருக்கின்றன என்பது குறித்து மக்களுக்கு தெரியவரும்" என்றார்.


Click it and Unblock the Notifications











