ஆனந்தம் கூத்தாடும் பகாசூரனின் முதல் வீடியோ சாங் - வெளியிட்டார் இயக்குநர் கௌதம்

சென்னை: மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் பகாசூரன் படத்தின் முதல் வீடியோ பாடலான ஆனந்தம் கூத்தாடும் பாடலை இயக்குநர் கௌதம் வாசுதேவ் இன்று வெளியிட்டார்.

'பழைய வண்ணாரப்பேட்டை' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. முதல் படம் சொல்லிக்கொள்ளும்படி போகவில்லை. இதனையடுத்து திரௌபதி என்ற படத்தை இயக்கினார் மோகன் ஜி. இந்தப் படம் கடும் சர்ச்சையை சந்தித்தது. இயக்குநர் மோகன் ஜி பொதுவாக ஒரு சமுதாயத்துக்கு மட்டுமே ஆதரவு கொடுப்பார் என்ற பிம்பம் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 திரௌபதி கிளப்பிய சர்ச்சை

திரௌபதி கிளப்பிய சர்ச்சை

திரௌபதி திரைப்படத்தில் காதல் என்ற பெயரில் நடக்கும் போலி திருமணத்தை விமர்சிக்கிறோம் என்ற தொனியில் வெளியான அப்படம் ஆதிக்க சாதி மனப்பான்மையோடு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்கும் ரீதியில் படமாக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டும், விமர்சனமும் பலரால் வைக்கப்பட்டது. ஆனால் சமூகத்தில் நடக்கும் உண்மையைத்தான் படமாக எடுத்திருக்கிறேன் என கூறினார் இயக்குநர் மோகன் ஜி.

சர்ச்சையில் மோகன் ஜியின் ருத்ரதாண்டவம்

சர்ச்சையில் மோகன் ஜியின் ருத்ரதாண்டவம்

திரௌபதி படத்துக்கு பிறகு ருத்ரதாண்டவம் என்ற படத்தை இயக்கினார் மோகன் ஜி. படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் நடித்திருதார். இந்தப் படமும் திரௌபதி போலவே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தாக்கும் தொனியில் எடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவனை நேரடியாக விமர்சனம் செய்வதுபோல் காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து இதுபோன்ற படங்கள் எடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன. அதேசமயம், இங்கு அனைவருக்கும் படைப்பு சுதந்திரம் உண்டு என அவருக்கு ஆதரவு குரல்களும் எழுந்தன.

படங்கள் மட்டுமல்ல இயக்குநரும் சர்ச்சைதான்

படங்கள் மட்டுமல்ல இயக்குநரும் சர்ச்சைதான்

மோகன் ஜி இயக்கும் படங்கள் மட்டும் சர்ச்சைக்குள் சிக்காது. தனியார் சேனலின் அலுவலகத்துக்கு சென்று பகிரங்கமாக மிரட்டியது, பேட்டி கொடுக்கும்போது பதில் சொல்ல முடியாத கேள்விகள் கேட்கப்பட்டால் அந்தப் பேட்டியை பாதியிலேயே முடித்துக்கொண்டு கிளம்புவது என்று அவரே பலமுறை சர்ச்சைக்குள்ளும், ட்ரோலுக்குள்ளும் சிக்கிக்கொள்வார்.

சமீபத்தில்கூட நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனிடம் அவர் கொடுத்த பேட்டி சமூக வலைதளங்களில் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவனை இயக்கும் மோகன் ஜி

செல்வராகவனை இயக்கும் மோகன் ஜி


செல்வராகவன் மற்றும் நட்ராஜ் நடிப்பில் பகாசூரன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் மோகன் ஜி. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. பெண்களை சுற்றி நடக்கும் குற்றங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியிருப்பதாக தெரிகிறது. படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஆனந்தம் கூத்தாடும் என்ற பாடலின் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் கௌதம் வாசுதேவ் வெளியிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X