பக்ரீத் பெருநாள்: அமிதாப் பச்சன் முதல் ஹன்சிகா வரை.. வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!
சென்னை: இஸ்லாமியர்களின் புனித நாளான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
Recommended Video
அமிதாப் பச்சன் முதல் சனம் ஷெட்டி வரை பல சினிமா பிரபலங்கள் இஸ்லாமியர் சகோதரர்களுக்கு பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக சமூக விலகலுடன் பல இடங்களில் தொழுகைகள் நடத்தப்பட்டன. பலரும் இல்லங்களிலேயே பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

அமிதாப் பச்சன் வாழ்த்து
கொரோனா நோய் தொற்றுக் காரணமாக மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் அமிதாப் பச்சன், தனது ட்விட்டர் பக்கத்தில், Eid al Adha Mubarak என பக்ரீத் வாழ்த்துக்களை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். பல இஸ்லாமிய சகோதர்கள் விரைவில் குணமடைந்து அமிதாப் பச்சன் வீடு திரும்ப வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிரஞ்சீவி வாழ்த்து
டோலிவுட் மெகா ஸ்டார் நடிகரான சிரஞ்சீவி, தொழுகை செய்யும் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அனைவரும் ஆரோக்கியமாகவும் அமைதியுடனும் இருக்க வேண்டும், அன்பை பகிர்வோம், வீட்டில் பாதுகாப்பாக சந்தோஷமாக இருப்போம் எனவும் பதிவிட்டுள்ளார் அவரது ரசிகர்களும் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஹன்சிகா வாழ்த்து
நடிகை ஹன்சிகா, பர்தா அணிந்தபடி தொழுகை செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு, இஸ்லாமிய சகோதரர்களுக்கு பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இஸ்லாமிய ரசிகர்கள், நடிகை ஹன்சிகாவுக்கு நன்றி தெரிவித்து, பக்ரீத் வாழ்த்துக்களை அவரது ட்வீட்டுக்கு கீழே கமெண்ட் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

பிருத்விராஜ் வாழ்த்து
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிருத்விராஜ் நேற்றே பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். பிருத்விராஜின் ரசிகர்கள், அவரது புகைப்படங்களை பதிவிட்டு பக்ரீத் ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர். மற்ற நடிகர்களின் ரசிகர்களும், தங்கள் ஹீரோக்களின் படங்களை பதிவிட்டு, பக்ரீத் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சனம் ஷெட்டி வாழ்த்து
அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான பக்ரீத் தின வாழ்த்துக்கள் என்றும், இந்த அழகான பக்ரீத் எடிட்டுக்கு நன்றி என பத்ரி எனும் போட்டோ எடிட்டருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி. இந்த சிகப்பு நிற உடையில் ரொம்ப அழகா இருக்கீங்க என்றும், உங்களுக்கும் பக்ரீத் வாழ்த்துக்கள் என்றும் அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











