பக்ரீத் பாடல்களை முடக்கிய ஸ்டார் மியூசிக் - டெக்னிகல் ப்ராப்ளமாம்

Recommended Video

Bakrid Sneak Peek:பக்ரீத் படத்தின் கதை Vikranth|Jagadeesan Subu

சென்னை: பக்ரீத் படத்தின் பாடல்களும் டீசர்களும் திடீரென முடக்கப்பட்டதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி இப்படத்தின் தயாரிப்பாளர் முருகராஜ், ஸ்டார் மியூசிக் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்

ஒரு நல்ல திறமையான நடிகரை தமிழ் சினிமா இன்னும் பயன்படுத்திக்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு நடிகர் விக்ராந்த் ஒரு நல்ல உதாரணம். அறிமுகமானது என்னவோ மசாலா படமாக இருந்தாலும், அதற்கு பின்பு அவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் அனைத்துமே முத்தான படங்கள் தான்.

Bakrid Movie Teaser and songs Freezes by Star Music

இவர் நடிப்பில் வெளியான, முத்துக்கு முத்தாக, பாண்டிய நாடு, தொண்டன், நெஞ்சில் துணிவிருந்தால், வெண்ணிலா கபடிக்குழு 2 வரிசையில், தற்போது விக்ராந்த் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் பக்ரீத். இதில் இவருக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். ஜெகதீசன் சுபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை எம்10 புரொடக்ஷன்ஸ் சார்பாக முருகராஜ் தயாரித்திருக்கிறார்.

Bakrid Movie Teaser and songs Freezes by Star Music

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசத்தை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், யூடியூப்பில் பக்ரீத் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் முடக்கி இருக்கிறது.

இதுகுறித்து தயாரிப்பாளர் முருகராஜ் கூறும்போது, ஸ்டார் மியூசிக் நிறுவனத்திடம் பக்ரீத் படத்தின் டீசர், பாடல்களை வெளியிடும் உரிமையை கொடுத்திருக்கிறேன். படம் வெளியாகும் நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் இதன் டீசர் மற்றும் பாடல்கள் ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) முடக்கியது. என்ன காரணம் என்று அவர்களிடம் தொடர்பு கொண்டால், தவறுதலாக அப்படி ஆகிவிட்டது என்று சாதாரணமாக கூறிவிட்டார்கள்.

ஏறக்குறைய 20 மணி நேரத்திற்கும் மேலாக முடக்கி இருக்கிறார்கள். இதனால் எனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டிஸும் அனுப்பி இருக்கிறேன். பக்ரீத் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஸ்டார் இந்தியா நிறுவனத்தால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன், என்றார்.

ஆனால், தற்போது பக்ரீத் படத்தில் இடம்பெற்றுள்ள ஆலங்குருவிகளா பாடல் யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப்பாடலை இதுவரையிலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கேட்டு ரசித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X