twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நல்லா புரமோ போட்டு ஏமாத்துறாங்க.. பிரச்சார மேடையான கன்ஃபெஷன் ரூம், பாலா, ஆரி பேசியது இதுதான்!

    |

    சென்னை: நேற்றைய பிக் பாஸ் நிகழ்சியின் முதல் புரமோவில் பாலாஜி முருகதாஸ் கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுவதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை பாலாவை அதிரடியாக வெளியே அனுப்புகிறார்களோ என சந்தோஷப்பட்டனர்.

    ஆனால், தங்களை பற்றிய பிரச்சார மேடையாகத் தான் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்கள் பேசிய காட்சிகளை முதல் புரமோவில் பாலாவை மட்டும் காட்டி கட் செய்து பிக் பாஸ் எடிட்டர் ஏமாற்றி இருந்தார்.

    போகும் போது பாலாவுக்கு ஆஜீத் சொன்ன 'நச்’ அட்வைஸ்.. ஆரிக்கு சூப்பர் பாராட்டு.. வாழ்த்திய கமல்!போகும் போது பாலாவுக்கு ஆஜீத் சொன்ன 'நச்’ அட்வைஸ்.. ஆரிக்கு சூப்பர் பாராட்டு.. வாழ்த்திய கமல்!

    பாலாஜி, ஆரி, ரியோ மற்றும் சோமசேகர் தங்களை பற்றி மக்களிடம் எப்படி பிரச்சாரம் செய்தார்கள் என்பதை பார்ப்போம்.

    மன்னிப்பு கேட்ட பாலாஜி

    மன்னிப்பு கேட்ட பாலாஜி

    பாலாஜிக்கு பிக் பாஸ் வீட்டில் மன்னிப்பு கேட்பது என்பதும் ஒரு ஸ்ட்ராட்டஜியாகவே மாறிவிட்டது. கடந்த சீசன் போட்டியாளர்களையும், ஓட்டுப் போட்ட மக்களையும், தொகுத்து வழங்கிய கமலையும் மட்டம் தட்டிய மாதிரி பேசியதற்கு கன்ஃபெஷன் ரூமில் மன்னிப்பு கேட்டார்.

    ரசிகர்கள் ஏமாற்றம்

    ரசிகர்கள் ஏமாற்றம்

    ஜித்தன் ரமேஷை அதிரடியாக கன்ஃபெஷன் ரூமில் இருந்து எவிக்ட் பண்ணது போல, பாலாஜியையும் இந்த வாரம் எவிக்ட் பண்ண வேண்டும் என ரசிகர்கள் வைத்த கோரிக்கையை ஏமாற்றி, இறுதிச்சுற்றுக்கு பாலாவை கொண்டு செல்ல அவருக்கு பிரச்சாரம் பண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

    இது என்ன நியாயம்

    இது என்ன நியாயம்

    இதற்கு முன்பாக மைக்கை கழட்டியவர்கள், கோபமாக பேசியவர்கள், ரூல்ஸை மீறியவர்களை எல்லாம் அதிரடியாக பாரபட்சம் பார்க்காமல் வெளியேற்றிய நிலையில், பாலாவை மட்டும் பாதுகாப்பது, ஃப்ரீஸ் டாஸ்க்கில் ஒரு முறை கூட ரூல்ஸை மதிக்காதது குறித்து கேள்வி எழுப்பாதது, அப்படி கத்தி, மைக்கை உடைத்து, தலையணையை தூக்கி அடித்ததற்கு கமல் அதிரடி நடவடிக்கையே எடுக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான்.

    ஆரியின் பிரச்சாரம்

    ஆரியின் பிரச்சாரம்

    டைட்டில் வின் பண்ண வேண்டும் என ஆசைப்படவில்லை. இந்த வீட்டில் தகுதியானவனாக இருந்தால் போதும், தானாக டைட்டில் கிடைக்கும் என நினைக்கிறேன். மக்களை மதிக்கிறேன். அவர்கள், இதுவரை என் மேல் வைத்திருக்கும் அன்புக்கு நன்றி, அதற்காக மேலும் உழைப்பேன் என்று அழகாக பிரச்சாரம் செய்தார்.

    பத்து வருஷ கதை

    பத்து வருஷ கதை

    எப்போ பேசினாலும், சோமசேகர் மறுபடி மறுபடி அந்த பத்து வருஷ கதையை மட்டுமே எடுத்து பேசி ரசிகர்களை கடுப்பேற்றுகிறார். எந்த சண்டைக்கும் போகாமல், அன்பு கேங்கின் அடிமையாகவே சோம் இன்னமும் இருப்பது தெளிவாக தெரிகிறது. இதுவரை 5 முறைக்கு மேல் கேப்டனாக ஆக்க வேண்டும் என அன்பு கேங் எடுத்த முயற்சியில் தான் ஒருமுறை கூட ஜெயிக்கவில்லை என்பதை ஒத்துக் கொண்டார். அதே போல, இவரை இதுவரை யாரும் ஜெயிலுக்குள் அனுப்பவில்லை.

    நானாக இருக்கேன்

    நானாக இருக்கேன்

    இத்தனை நாள் நான் எப்படி இருந்தேனோ அப்படியே இனியும் இருக்கப் போகிறேன். மக்களுக்கு என்னை பிடித்தால் ஓட்டு போடுங்க, இல்லை என்றால் போட வேண்டாம். என்னோட பெஸ்ட்ட என்னோட ஃபன்ன தொடர்ந்து கொடுத்துட்டு இருப்பேன் என ரியோவும் தனது பிரச்சாரத்தை பேசி முடித்தார்.

    English summary
    Balaji Murugadoss, Aari, Rio Raj and Som explain about their self to winning title in the confession room.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X