நான் சீரியஸா ரொமான்ஸ் கற்று கொடுத்தேன், த்ருவ் விக்ரமளவுக்கு கஷ்டப்படுத்தவில்லை: பாலா
Recommended Video

சென்னை: த்ருவுக்கு சீரியஸாக ரொமான்ஸ் கற்றுக் கொடுத்ததாக பாலா தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பாலா நாச்சியார் திரைப்படத்திற்கு பிறகு இயக்கியிருக்கும் படம் வர்மா. தெலுங்கில் வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் தயாராகியுள்ளது. விக்ரம் மகன் த்ருவ் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

பாலாவுடைய படங்கள் என்றாலே அவருடைய டச் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும். முதல்முறையாக ஒரு ரீமேக் படத்தை இயக்கியிருக்கிறார் எனும்போது அது எப்படி பாலாவின் ஸ்டைலில் உருவாகியிருக்கும் என ஆவலாக உள்ளது.
த்ருவ்வின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய பாலா, சேது திரைப்படம் பண்ணும் போது த்ருவ் ஆறு மாத கைக்குழந்தையாக இருந்ததாக தெரிவித்தார். தவழும் குழந்தையாக இருந்தபோதே, த்ருவ் பொம்மைகளில் ஆண் பெண் வித்தியாசத்தை கண்டுபிடித்து சொல்லுமளவிற்கு புத்திசாலியாக இருந்ததாகக் கூறினார்.
அர்ஜுன் ரெட்டி படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் இருந்ததே, உங்களுடைய ரொமான்ஸ் ஸ்டைல் எப்படி என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாலா, சீரியஸாக ரொமான்ஸ் சொல்லிக் கொடுத்ததாக தெரிவித்தார். பொதுவாக எல்லா படங்களிலும் கஷ்டப்படுவேன் என்றும், ஆனால் இப்படத்தில் தனக்கு கஷ்டம் இல்லாமல் பார்த்துக்கொண்டார் எனவும் குறிப்பிட்டார்.
விக்ரமை விட கம்மியா கஷ்டப்படுத்தினாரா எனக் கேட்டதற்கு, சற்று யோசித்து ஆமா என்றார். அதைக் கேட்டு நெகிழ்ந்துபோன விக்ரம் பாலாவின் கழுத்தை செல்லமாக நெரித்தார்
இப்படத்தில், த்ருவ்வுக்கு ஜோடியாக மேகா சௌத்ரி நடித்துள்ளார். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், ரைசா வில்சன், ஆகாஷ் பிரேம்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இ4 என்டர்ட்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. அர்ஜுன் ரெட்டி பட இசையமைப்பாளர் ராதன் இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











