யாருக்கும் தெரியாமல்.. பாத்ரூமில் ஷிவானியுடன் ரொமான்ஸ் செய்யும் பாலாஜி.. அப்போ அதுவும் நடிப்பா!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் யாருக்கும் தெரியாமல் பாலாஜியும் ஷிவானியும் பாத்ரூமில் ரொமான்ஸ் செய்ததை பார்த்த ரசிகர்கள் ஷிவானியை எச்சரித்துள்ளனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி, பக்கா பிளே பாயாக உள்ளார். ஆண் ஹவுஸ்மெட்ஸ்களை காட்டிலும் அதிகம் பெண் போட்டியாளர்களுடனே நேரத்தை கழித்து வருகிறார்.
ஒவ்வொரு வாரமும் ஒருவருடன் க்ளோஸாக இருந்து கொண்டாடி வருகிறார். கேபி, சனம், சம்யுக்தா, அனிதா, ஷிவானி, சுச்சி என பெண் போட்டியாளர்களுடன் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறார்.

சுச்சி வந்த பிறகு
ஆனால் பாலாஜி ஷிவானியுடன் காட்டிய நெருக்கம் எல்லை மீறியது. அவர்கள் காதலிக்கிறார்கள் என்றே பேசப்பட்டது. சுச்சி வந்த பிறகு ஷிவானியை விட்டு விலகினார் பாலா.

டிஸ்டர்ப் பண்ணாதே
சுச்சியுடன் பாலாஜி அதிக நேரம் செலவழிப்பதை பார்த்து காண்டானார் ஷிவானி. ஷிவானி தன் மீது பொஸஸிவ்வாக இருப்பதை பார்த்த பாலாஜி, நேற்று முன்தினம் என்னை டிஸ்டர்ப் பண்ணாதே என்று சொல்லிவிட்டு இடத்தை காலி செய்தார்.

வெல்கம் டூ சிங்கிள்ஸ் கேங்
இதனால் ரம்யா, சம்யுக்தா ஆகியோருடன் சேர்ந்து சூப் சாங் பாடினார். ஷிவானி தங்களின் கேங்கில் இணைந்ததை, வெல்கம் டூ சிங்கிள்ஸ் கேங் என்று வரவேற்றனர் ரம்யாவும் சம்யுக்தாவும்.

தப்பிச்சுடு ஷிவானி
தொடர்ந்து கண்ண கலங்க வைக்கும் பையங்க வேணாம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நட்பு போதும் என மூன்று பேரும் சேர்ந்து பாடல்களை பாடி புண்பட்ட மனதை தேற்றிக்கொண்டார். ஷிவானி பாலாஜியை விட்டு விலகியதை பார்த்த நெட்டிசன்கள் ரொம்ப சந்தோஷம் , தப்பிச்சுடுங்க என்றனர்.

பாத்ரூமில் ரொமான்ஸ்
ஆனால் நேற்றைய எபிசோடில் பாலாஜி பாத்ரூம் கழுவிக் கொண்டிருக்க அங்கு சும்மா அமர்ந்திருக்கும் ஷிவானி, பாத்ரூம் கழுவியாச்சா என்றார். அதற்கு ஊற வைத்துள்ளேன் என்ற பாலாஜி, ஊற வைக்கனும்னு தெரியாதா? நீ என்ன பாப்பாவா? என பல வார்த்தைகளை பேசினார்.

யாருக்கும் தெரியாம ரொமான்ஸ்
தொடர்ந்து ஷிவானியை அழைத்த பாலாஜி, அவரின் கைகளை கோர்த்து செம ரொமான்ட்டிக்காக ஆட்டம் போட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் என்னடா எல்லாம் முடிஞ்சுடுச்சுன்னு பார்த்தா இப்படி யாருக்கும் தெரியாம ரொமான்ஸ் பண்றீங்க என கேட்டு வருகின்றனர்.

ஏமாந்துவிடாதே ஷிவானி
இன்னும் சில நெட்டிசன்கள் பாலாஜி ஒரு ஃபிராடும்மா, நம்பி ஏமாந்துவிடாதே எப்படியாவது எஸ்கேப் ஆகிவிடு என்று அட்வைஸ் கூறி வருகின்றனர். மேலும் பாலாஜி உன்னை பயன்படுத்தி வருகின்றார் என்றும் அவருடைய சகவாசம் வேண்டாம் என்றும் எச்சரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











