மூன்றாவது முறையாக இணையவுள்ளதா பாலா - சூர்யா கூட்டணி!?

சென்னை: இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 40வது படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

கொரோனா தொற்று காரணமாக நின்று போன படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜூலை 22 வெளியீடு

ஜூலை 22 வெளியீடு

இந்த படத்தின் தலைப்பு & ஃபர்ஸ்ட் லுக் இன்னும் வெளியிடப்படவில்லை. நாளை (ஜூலை 22ம் தேதி) மாலை

6 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரவுள்ளது. படத்தை டிசம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சூர்யா - வெற்றிமாறன்

சூர்யா - வெற்றிமாறன்

இதற்கிடையில் சூர்யா கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேலின் அடுத்த படத்தில் வக்கீலாக கவுரவ வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் இந்த ஆண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.

மீண்டும் இணைகிறது

மீண்டும் இணைகிறது

பின்னர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதனை முடித்த பிறகு சூர்யா இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. நந்தா, பிதாமகன் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாலா - சூர்யா இணையவுள்ள திரைப்படம் மல்டி ஹீரோ ப்ராஜக்ட் என பேசப்படுகிறது. சூர்யா, ஆர்யா, அதர்வா ஆகியோர் இதில் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூர்யா பிறந்தநாளன்று (ஜூலை 23) இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X