யாராவது சான்ஸ் கொடுங்க.. ஹீரோவாகும் ஆசை வந்துடுச்சு.. ரியோ, ஆரியை நல்லா காக்கா பிடிக்கும் பாலா!

சென்னை: ரியோ ராஜின் இரண்டாவது படமான பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் வீடியோ பாடலை பார்த்ததும் பாலாவுக்கு ஹீரோ ஆகவேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது.

மிஸ்டர் இண்டர்நேஷனல் பட்டத்தை பெற்று ஹேண்ட்ஸம் ஹங்காக பாலா இருந்தாலும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், ஆரவ், ஹரிஷ் கல்யாண் போல மாறலாம் என்றே பாலா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என்றே தெரிகிறது.

பெட்டி பாம்பாக

பெட்டி பாம்பாக

பிக் பாஸ் வீட்டில் ரியோ ராஜ் குரூபிசம் பண்ணுகிறார் என்றும் ஆரி அனைவரையும் மட்டம் தட்டுகிறார் என்றும் எகிறி கொண்டிருந்த பாலாவை பெட்டி பாம்பாக அடக்கி உள்ளது ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் வீடியோ பாடல். பிக் பாஸ் வீட்டில் அந்த பாடல் ரிலீஸ் செய்யப்பட்டதும் தான் பாலாவின் மனதில் அந்த மாற்றம் எழுந்துள்ளது.

ஹீரோக்களிடம் மன்னிப்பு

ஹீரோக்களிடம் மன்னிப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே ஹீரோக்களான ரியோ மற்றும் ஆரியிடம் பாலாஜி முருகதாஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது மிகவும் நெகிழ்ச்சியான தருணமாகவே பார்க்கப்படுகிறது. உங்களை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் சாரி என்றும், இந்த இடத்துக்கு வர நீங்க எவ்ளோ போராடியிருப்பீங்கன்னு இப்போ தான் எனக்கு புரியுது என்று மனம் திறந்து ஓப்பனாக பேசி பாராட்டுக்களை அள்ளி வருகிறார் பாலா.

இருவரும் கட்டிப்பிடித்து

இருவரும் கட்டிப்பிடித்து

நீங்களாம் வாழ்க்கையில எவ்வளவோ கஷ்டங்களை பார்த்து இந்த இடத்துக்கு வந்திருப்பீங்க, நான் இப்போதான் அடியெடுத்து வைக்கிறேன். ஆனால், உங்களை எல்லாம் இழுத்து இறக்கிவிட்டு ஏறப் பார்த்தேன், அது ரொம்ப தப்புன்னு புரிஞ்சிக்கிட்டேன் என பாலா பேசியதை கேட்டதுமே எந்த ஒரு ஈகோவும் இல்லாமல், ரியோவும், ஆரியும் பாலாவை கட்டிப்பிடித்து அரவணைத்தனர்.

ஹீரோ ஆசை

ஹீரோ ஆசை

இது இலக்கு இல்லை என பிக் பாஸ் நிகழ்ச்சியை சுட்டிக் காட்டிய பாலா, அது தான் இலக்கு என ரியோவின் படத்தின் பாடலை குறிப்பிட்டு, தனக்கும் ஹீரோ ஆசை இருப்பதை வெளிப்படுத்தி உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான ஆரவ், ஹரிஷ் கல்யாண், கவின் போல தானும் ஹீரோவாக வேண்டும் என்கிற குறிக்கோளுடன் தான் பாலா செயலாற்றி வருகிறார்.

நிச்சயம் கிடைக்கும்

நிச்சயம் கிடைக்கும்

ஏற்கனவே ஆர்.கே. சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ள டைசன் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் பாலாஜி முருகதாஸ். அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. சிறுத்தை சிவா, கரோலின் காமாட்சி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், பிக் பாஸ் பிளாட்ஃபார்ம் தன்னை ஒரு ஹீரோவாக மக்கள் ஏற்றுக் கொள்ள உதவும் என்றே விளையாடி வருகிறார். பாலாவுக்கும் நிச்சயம் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X