கல்லீரல் பாதிப்பு.. சீக்கிரம் போய்டுவேன்.. கலங்கிய நடிகருக்கு உதவிய சக நடிகர்.. தனுஷ் கண்டுக்கலையே

சென்னை: செல்வராகவனும், தனுஷும் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து அறிமுகமானவர் அபிநய். தொடர்ந்து தமிழில் சில படங்கள் நடித்த இவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. ஒருகட்டத்தில் அவர் ஒட்டுமொத்தமாக சினிமாவிலிருந்து ஒதுங்கினார். சூழல் இப்படி இருக்க அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவர் உருக்கமாக பேசியது அனைவரையும் கலங்கடித்திருக்கிறது.

இந்திய சினிமாவில் சிறந்த இயக்குநர்கள் வரிசையில் செல்வராகவனும், சிறந்த நடிகர்கள் வரிசையில் தனுஷும் இருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேருமே அறிமுகமான திரைப்படம் துள்ளுவதோ இளமை. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இப்படம் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது. அதேசமயம் அப்படத்தில் அறிமுகமான அனைவருக்குமே நல்ல அடையாளத்தையும் பெயரையும் பெற்றுக்கொடுத்தது.

அபிநய்: அப்படி அந்தப் படத்தில் அறிமுகமானவர்களில் ஒருவர்தான் அபிநய். அதில் தனுஷின் நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார். க்ளீன் ஷேவ், சினிமாவுக்கு தேவையான முக அமைப்பு, திறமை என அனைத்தையும் கொண்டிருந்தார். சொல்லப்போனால் அப்படத்தின் ரிலீஸ்போது அனைவரும் தனுஷை உருவ கேலி செய்தார்கள். அப்போது இவரை குறிப்பிட்டு; அபிநய்தான் ஹீரோ மாதிரி இருக்கிறார் என்று ஓபனாகவே பேசினார்கள்.

Bala has helped actor Abhinay who has liver disease Here are details
Photo Credit:

தொடர்ந்து நடித்த அபிநய்: துள்ளுவதோ இளமை படத்துக்கு பிறகு சக்சஸ், தாஸ், தொடக்கம், சொல்ல சொல்ல இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.அவர் எத்தனை படங்கள் நடித்தாலும் பெரிய பிரேக் எதுவும் கிடைக்காமல் இருந்தது. தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார் அவர். ஒருகட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்து வற்றி போக ஆரம்பித்துவிட்டன.

கல்லீரல் பாதிப்பு: சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கிய பிறகு தன்னுடைய வாழ்வாதாரத்துக்காக சில வேலைகளை செய்தார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் அவருக்கு லிவர் சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் பாதிப்பு நோய் வந்தது. அந்த நோயிலிருந்து மீள்வதற்கு அறுவை சிகிச்சை செய்ய 28 லட்சம் ரூபாய் தேவைப்படும்; திரைத்துறை நண்பர்கள் உதவ வேண்டும் என்று உருக்கத்துடன் கேட்டிருந்தார். அந்த வீடியோ பலரையும் ஷாக்கில் ஆழ்த்தியது. இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என அனைவருமே பதிவிட்டனர்.

உதவிய பாலா: இந்நிலையில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கும் அபிநய் கிங்கருக்கு நடிகர் கலக்கப்போவது யாரு பாலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி கொடுத்திருக்கிறார். நேராக அபிநய்யின் வீட்டுக்கு சென்ற பாலா அவரை நலம் விசாரித்து, விரைவில் மீண்டுவிடுவீர்கள் என நம்பிக்கையளித்து இந்த தொகையை கொடுத்தார். அப்போது அபிநய்யோ பாலாவிடம், சீக்கிரம் போய்விடுவேன் என சொல்ல; அதெல்லாம் இல்லை; சீக்கிரம் நடிக்க வாங்க. உங்களுடன் என்னை நடிக்க வைப்பீர்களா என கேள்வி கேட்டு தேற்றுகிறார். இந்த வீடியோவும் காண்போரை கலங்க செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி தன்னுடன் அறிமுகமான நடிகருக்கு தனுஷ் உதவி செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகளும் வலுக்க ஆரம்பித்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X