குறுக்குபுத்தி பயில்வானுக்கு நடுமண்டையில் நறுக்குன்னு கொட்டிய ஆண்டவர்.. ஹேப்பி மோடில் ஹேட்டர்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் பாலாஜியை நடிகர் கமல் வறுத்தெடுத்ததை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் பாலாஜி முருகதாஸ் தன் இஷ்டத்துக் விளையாடினார்.
பிக்பாஸ் ஒரு கணக்கு சொல்ல இவர் ஒரு கணக்கு சொல்லி டாஸ்க்கில் சொதப்பினார். இதனால் ஒட்டு மொத்த ஹவுஸ்மெட்ஸும் கடுப்பாகினர்.

ஸ்பிரீட்ட கெடுக்காதீங்க
ஒவ்வொரு வாரமும் ஏதாவது சொதப்புவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் பாலாஜி. இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் கேம்மோட ஸ்பிரீட்ட கெடுக்காம விளையாடுங்கள் என விளாசினார் கமல். இதனை பார்த்த ரசிகர்கள் ஜாலியாகியுள்ளனர்.

ஒன்னுமே தெரியாத பாப்பா
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இப்ப ஒன்னுமே தெரியாத பப்பா மாதிரி பயில்வானின் முகம்.. என நடிகர் செந்தில் படத்துடன் பாலாஜியின் படத்தை ஒப்பிட்டு கிண்டலடித்துள்ளார்.

உன் கையிலதான் இருக்கு
ஒரு புரமோல செருப்படி வாங்குன பரவால்ல.
பாதி ப்ரோமோல செருப்படி வாங்குறானே இவன்
மத்தவங்கள நீ மதிக்காம அகங்காரமா பேசுன பாத்தியா அப்பவே உனக்கு செருப்படி ஆரம்பிச்சிடுச்சுடா பாலாஜி முருகதாஸ்.
இது தொடருறதும் தொடராததும் உன் கையில் தான்.. என கடுமையாக விமர்சித்துள்ளார்.

புத்தி மட்டு
மற்றொரு நெட்டிசனான இவர், ஆத்திரகாரனுக்கு புத்தி எப்போதும் மட்டுதான்.. எடுத்துகாட்டு இந்த பயில்வான்.. என கூறியுள்ளார்.

அவருக்கு அது மட்டும்தான்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாஸ் அவருக்கு ரூல்ஸ பிரேக் பண்ண மட்டும் தான் தெரியும்.. என பாலாஜியை விமர்சித்துள்ளார்.

நறுக்குன்னு கொட்டிய ஆண்டவர்
மற்றொரு நெட்டிசனான இவர் குறுக்கு புத்தி பயில்வானுக்கு நடு மண்டையில் நறுக்குன்னு கொட்டிய ஆண்டவர்.. என புரமோவை பார்த்து பூரிப்படைந்துள்ளார் இந்த நெட்டிசன்.

புரமோ மொக்கைதான்
ரூல்ஸ் பிரேக் பண்ணி அவன் ஒரு ரூல்ஸ் போடுறது தான் பாலாவோட ஸ்ட்ரேட்டர்ஜி இது தெரியாம ஆண்டவர் கிளாஸ் எடுத்துட்டு இருக்காரு.. போயா யோவ்.. இரண்டாவது பிரமோவும் மொக்கை தான் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

விருப்பமா இருக்கும்
அட போங்கடா வாரா வாரம் இதே பல்லவி. நறுக்குன்னு ஒரு கொட்டு கொட்டனும். அப்பதான் பார்க்க நமக்கும் விருப்பமா இருக்கும். இந்த வாரமும் போர்தான். என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

டைமுக்கு வர்றதில்ல..
ஒழுங்கா டைமுக்கு புரொமோ போட தெரியலை, அதுகூட சரியான நேரத்துல வர்றதில்ல. இதுல 16 பேரை வச்சி மேய்ச்சு,
அதுலயும் நல்லவங்கள தேர்ந்து எடுக்க போறாங்களாம்.. என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











