பாலாவுடன் ஒண்டிக்கு ஒண்டி மல்லுக்கட்டிய சனம்.. என்னா பேச்சு.. ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்லை!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் எடுத்த எடுப்பிலேயே பாலாவுக்கும் சனமுக்கும் நடந்த சண்டை பிக்பாஸ் வீட்டையே அலற விட்டது.

பிக்பாஸ் வீட்டில் இன்றைய நாள் குலேபகாவளி பாடலுடன் தொடங்கியது. காலையில் போடும் பாடலுக்கு ஹவுஸ்மேட்ஸ் ஆட மறுத்து இழுத்து போர்த்தி தூங்கியதால் லக்ஸரி பட்ஜெட்டில் சில பாயிண்ட்ஸ் குறைக்கப்பட்டது.

இதனால் இன்று ஒலிபரப்பப்பட்ட பாடலுக்கு ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் எழுந்து நின்று ஆட்டம் போட்டனர்.

மத்தி மீன்

மத்தி மீன்

தொடர்ந்து ரேகா கேட்டதால் பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளுக்கு மத்தி மீனை அனுப்பினார். அதனை சக ஹவுஸ்மேட்டுகளுடன் மகிழ்ச்சியாக கூறினார் ரேகா. மீன் வந்ததால் ஹவுஸ் மேட்டுகளும் ரொம்பவே மகிழ்ச்சியடைந்தனர்.

மீன் குழம்பு

மீன் குழம்பு

இதனை தொடர்ந்து ஆண்கள் பெட்ரூமுக்கு வந்த ரேகா, மீன் குழம்பு வைக்க தேவையான பொருட்களை கூறியதோடு சமைத்தால் ஆளுக்கு ஒரு வறுத்த மீனும், குழம்பு மீன் பாதி பீசும் வரும். பொருட்கள் கிடைத்தால் சமைத்து வைத்துவிடுவேன் என்றார்.

மூக்கை நுழைக்காதீங்க

மூக்கை நுழைக்காதீங்க

அதுகுறித்து பேசிய பாலா, இன்று வைத்து நாளை சாப்பிடலாம் என்றும் ரேகா மேடம் சொல்கிறார்கள் என்றார். உடனே சனம் ஷெட்டி இன்று வைத்தால் நாளை இருக்காது என்றார். அதற்கு கோபப்பட்ட பாலா, நீங்கள் எல்லாத்துலேயும் மூக்கை நுழைக்காதீங்க என்றார்.

சுரேஷிடம் பஞ்சாயத்து

சுரேஷிடம் பஞ்சாயத்து

எதுக்கு எல்லா விஷயத்திலும் தலையிடுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு எல்லாரும் பேசும் போது நான் பேசுவேன், எதற்கு இப்படி தேவையில்லாமல் கோபப்படுகிறீர்கள் என்று கேட்டார் சனம். பின்னர் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் இந்த பஞ்சாயத்தை கொண்டு சென்றார் சனம்.

பேச பயமாக உள்ளது

பேச பயமாக உள்ளது

என்னிடம் தான் இப்படி பேசுகிறார். தைரியம் இருந்தால் மற்றவர்களிடம் அப்படி பேச சொல்லுங்கள் என்றார். உடனே சுரேஷ் சக்கரவர்த்தியும் ஏன்டா சனமிடம் அப்படி பேசுகிறாய் என்றார். அதற்கு அவருடன் பேச பயமாக உள்ளது.

எல்லோருக்கும் அட்டேன்ஷன்

எல்லோருக்கும் அட்டேன்ஷன்

அவர் கவனத்தை பெறுவதற்காக என்னை டார்கெட் செய்கிறார். அதனால் அவர் என்னிடம் பேச வேண்டாம் என்றார். உடனே சனம், எல்லோருக்கும் அன்டேன்ஷன் வேண்டும் என்பதற்காகதான் இத்தனை கேமராக்களின் முன்னாள் இருக்க வந்துள்ளோம்.

என்னிடம் பேசாதீங்க

என்னிடம் பேசாதீங்க

உங்களிடம் பேசிதான் எனக்கு அட்டேன்ஷன் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு இடத்தில் இருக்கும் போது எல்லோரும் எல்லோரிடமும் பேசுவார்கள், உங்களுக்கு பேச வேண்டாம் என்றால் நான் பேசவில்லை. எனக்கு உங்களுடன் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஒண்டிக்கு ஒண்டி

ஒண்டிக்கு ஒண்டி

இருவரும் ஒண்டிக்கு ஒண்டி மல்லுக்கு நின்றனர். இருவரும் பதிலுக்கு பதில் பேசி பெரும் வாக்குவாதம் செய்தனர். அவர்களின் சண்டை முடிந்தது இடி இடித்து மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X