விக்ரம் மகனுக்கு பெரிய ஓபனிங் கொடுக்க பாலா திட்டம்: செப் 23 த்ருவுக்கு முக்கியமான நாள்
த்ருவ் பிறந்தநாளுக்கு பாலா ஒரு திட்டம் போட்டுள்ளார்
Recommended Video

சென்னை: விக்ரமின் மகன் த்ருவ் பிறந்தநாளுக்கு பெரிய திட்டமொன்றை பாலா வைத்துள்ளார்.
"குட்டு பட்டாலும் மோதிரக் கையால் குட்டு படனும்" என்று சொல்வார்கள். அப்படி பாலா என்ற இயக்குனரின் திரைப்படத்தில் பணியாற்றிய விக்ரம், சூர்யா, ஆர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் இன்று உச்சத்தில் இருக்கின்றனர்.

அந்த வகையில் விக்ரமின் மகன் த்ருவ்விற்கு திரையுலகில் கால் பதிக்க ஸ்ட்ராங்கான அஸ்திவாரம் போடும் வகையில் அவரை கதாநாயகனாக வைத்து இயக்குனர் பாலா வர்மா என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்காக தயாராகி வருகிறது.
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவை வேலூர் விஐடி கல்லூரியில் நடத்த பாலா திட்டமிட்டுள்ளார்.
செப்டம்பர் 23 ஆம் தேதி த்ருவ் 23 வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். அதனை முன்னிட்டு இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. இது நிச்சயம் இயக்குனர் பாலா அளிக்கும் மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசாக அமையும்.
இத்திரைப்படத்திற்கு அர்ஜுன் ரெட்டி திரைப்பட இசையமைப்பாளர் ராதன் இசையமைத்துள்ளார். த்ருவ்வுக்கு ஜோடியாக மேகா நடித்துள்ளார். பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன், காலாவில் நடித்த ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இ4 என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இப்படம் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











