twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆண்டுக்கு 3 படங்கள்... இது பாலா ப்ளான்!

    By Shankar
    |

    இனி ஆண்டுக்கு 3 படங்களைத் தயாரிக்கப் போவதாகவும் அவற்றில் ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் இயக்குநர் பாலா கூறியுள்ளார்.

    பரதேசி' படத்திற்குப் பிறகு பாலா இயக்கி வரும் படம் ‘தாரை தப்பட்டை'. இதில் சசிகுமார் கதாநாயகனாகவும், வரலட்சுமி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

    இளையராஜா

    இளையராஜா

    கிராமிய நடனக் கலைஞர்களின் வாழ்க்கை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

    பிசாசு

    பிசாசு

    தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பாலா இப்படத்தை தயாரித்து வருகிறார். இது தவிர மிஷ்கின் இயக்கி வரும் ‘பிசாசு' படத்தையும் அவர் தயாரித்து வருகிறார்.

    மிஷ்கின்

    மிஷ்கின்

    மிஷ்கின் சொன்ன பத்து நிமிட கதை பிடித்துப்போகவே இப்படத்தை தயாரித்ததாக பாலா கூறினார். மிஷ்கின் போன்ற படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவது தனது கடமை என்றார்.

    3 படங்கள்

    3 படங்கள்

    படத் தயாரிப்பு குறித்து பாலா கூறுகையில், "நான் இந்த வருடமே 3 படங்களை தயாரித்து வெளியிட நினைத்தேன். ஆனால் முடியவில்லை. கண்டிப்பாக அடுத்த வருடத்தில் 3 படங்களை தயாரிப்பேன். அதில் ஒன்று நான் இயக்கும் படம். இரண்டு படங்களுக்கு மற்ற இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளேன்," என்றார்.

    English summary
    Director Bala says that he would produce 3 movies per year through his B Studios.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X