மிஷ்கின் இயக்கும் பிசாசு... இசை இளையராஜா.. தயாரிப்பு பாலா!
'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்திற்குப் பிறகு இயக்குனர் மிஸ்கின் மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை இயக்குநர் பாலா தன் பி ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கிறார்.
மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தைப் பார்த்து கண் கலங்கி பாராட்டுத் தெரிவித்தவர் பாலா.

வெறும் திருப்திதான்
அந்தப் படத்துக்கு பாராட்டுகள் குவிந்த அளவுக்கு வசூல் குவியவில்லை. நிறைய கஷ்டப்பட்டார். தெருவில் இறங்கி போஸ்டரெல்லாம் கூட ஒட்டினார். ஒரு நல்ல படம் தந்தோம் என்ற திருப்திதான் அவருக்கு மிஞ்சியது.
கை கொடுத்த பாலா
ஆனாலும் கவலைப்படாதே சகோதரா என்று கைகொடுக்க வந்துள்ளார் பாலா. ஒரு நல்ல படைப்பாளி மனம் சோர்ந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் உதவிக்கரம் நீட்டியுள்ள பாலா, இந்தப் படத்தைச் சொந்தமாகத் தயாரிக்கிறார்.
பிசாசு
படத்துக்கு பிசாசு எனத் தலைப்பிட்டுள்ளனர். இசையமைக்கும் பொறுப்பை இளையராஜா ஏற்றுள்ளார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் ராஜாவின் இசைதான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு 7, அவருக்கு 3!
மிஷ்கின் இயக்கும் 7வது படம் இது. தயாரிப்பாளராக பாலாவுக்கு இது மூன்றாவது படம்.
இந்தப் படத்திற்கான நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகிறது. மே 14ம் தேதி ஷூட்டிங் ஆரம்பமாகிறது.


Click it and Unblock the Notifications











