நான் கடவுள் படம் முடிந்ததும் ஸ்டார் ஹோட்டல்.. பாலா அவ்வளவு செய்தார்.. சிங்கம்புலி ஓபன் டாக்

சென்னை: இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் கடந்த வருடத்தில் வணங்கான் திரைப்படம் வெளியானது. முதலில் சூர்யாதான் ஹீரோவாக கமிட்டானார். ஆனால் அவர் விலகிவிட; அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். பாலாவின் இயக்கம் என்பதால் படத்துக்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அதேசமயம் அருணின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. அடுத்ததாக பாலா யாரை வைத்து இயக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கும் சூழலில்; அவர் குறித்து இயக்குநரும், நடிகருமான சிங்கம்புலி பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக மாறியவர் பாலா. விக்ரமை வைத்து சேது, சூர்யாவை வைத்து நந்தா, பிறகு இரண்டு பேரையும் சேர்த்து வைத்து பிதாமகன், ஆர்யாவை வைத்து நான் கடவுள் என இவர் இயக்கிய படங்கள் அத்தனையும் கோலிவுட்டின் புதிய வகை சினிமாக்கள் வருவதற்கு விதையாக இருந்தன. முக்கியமாக யாரும் பேச மறந்த அல்லது மறுத்த விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை தனது படங்களில் பேசியதன் மூலம்; சினிமாவில் இப்படிப்பட்ட மனிதர்களை பற்றியும் பேசலாம் என்பதை செய்து காட்டியவர் அவர்.

Bala s Kind Gesture Revealed Singampuli Shares Emotional Story
Photo Credit:

திடீரென சறுக்கிய பாலா: அவர் திரைத்துறையில் பீக்கில் இருந்தபோது பாலாவின் இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் பல முன்னணி நடிகர்கள் ஆசைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பாலாவோ தன்னுடைய கதைக்கு யார் பொருத்தமாக இருப்பாரோ அவரைத்தான் நடிக்க வைப்பார். அவரிடம் சிபாரிசு எல்லாம் வேலைக்கு ஆகாது. அப்படிப்பட்ட பாலாவுக்கு இடையில் பெர்சனலாகவும், தொழில்ரீதியாகவும் சில சிக்கல்கள் எழுந்தன. அது அவரது வாழ்க்கையில் பெரிய இடியை இறக்கியது என்றே சொல்ல வேண்டும்.

என்ன பிரச்னைகள்?: பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை அவரும், அவரது மனைவி மலரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள். தொழிலை பொறுத்தவரை விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா என்ற படத்தை இயக்கினார். அது அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக். ஆனால் அவர் எடுத்த வெர்ஷன் திருப்தி இல்லாததால் அதை ரிலீஸ் செய்யாமல்; இன்னொரு இயக்குரை வைத்து அதே படத்தை மீண்டும் எடுத்து வெளியிட்டார்கள். இது அவருக்கு நேர்ந்த அவமரியாதையாகவே பலரும் பார்த்தார்கள்.

Also Read
ரஜினிக்கு முன்பே அஜித்துடன் வம்பு..நிலைமை கை மீறியதால் பீதியான தவெக பிரபலம்.. இதே வேலையா?
ரஜினிக்கு முன்பே அஜித்துடன் வம்பு..நிலைமை கை மீறியதால் பீதியான தவெக பிரபலம்.. இதே வேலையா?

கைவிட்ட சூர்யா; முடிந்த வணங்கான்: அந்தப் பிரச்னையை முடித்துவிட்டு சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்தார். சில நாட்கள் ஷூட்டிங்கிற்கு சென்ற சூர்யா; பாதியிலேயே வெளியேறினார். இரண்டு பேரும் பரஸ்பரமாக பேசிவிட்டு எந்தப் பிரச்னையும் இல்லாமல் பிரிந்தார்கள். இருந்தாலும் அது பெரிய விவாதமானது. இதையெல்லாம் கண்டு கலங்காத பாலா அதே படத்தில் அருண் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைத்தார். கடந்த வருடம் வெளியான அந்தப் படம் தோல்வியை சந்தித்தது.

சிங்கம்புலி பேட்டி: இந்நிலையில் பாலா பற்றி சிங்கம்புலி பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் கடவுள் படத்தை எடுத்து முடித்தவுடன்; அதில் பிச்சைக்காரர்களாக நடித்தவர்களை சென்னைக்கு அழைத்து வந்தார் பாலா. அவர்களை ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்து மூன்ரு வேளையும் வகை வகையான சாப்பாடு போட்டு தனியாக ஒரு பேருந்து வைத்து ஏழு நாட்கள் சென்னையை சுற்றி காண்பித்தார். மேலும் இளையராஜாவின் வீட்டுக்கு அழைத்து சென்று; அவருடன் ஃபோட்டோ எடுக்க வைத்து; பரிசும் கொடுக்க வைத்தார். இதையெல்லாம் ஏன் செய்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவரோ பாவம் டா அவர்கள் இதையெல்லாம் என்றைக்கு பார்க்கப்போகிறார்கள் என சொன்னார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X