விக்ரம் மகனை இயக்கும் பாலா... வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

By Shankar

Recommended Video

விக்ரம் மகனை இயக்கம் பாலா வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!- வீடியோ

விக்ரமின் மகன் துருவ்-வை வைத்து பாலா இயக்கும் படத்தின் முதல் தோற்ற வடிவமைப்பு இன்று வெளியானது.

இந்தப் படத்துக்கு வர்மா எனத் தலைப்பிட்டுள்ளார் பாலா.

விக்ரம் மகன் துருவ் நடிக்க வருகிறார் என கடந்த ஓராண்டாகவே செய்தி வெளியாகி வந்தது. ஆனால் அவரை பெரிய இயக்குநர் ஒருவர் மூலம்தான் அறிமுகப்படுத்த வேண்டும் எனக் காத்திருந்தார் விக்ரம்.

பாலாவிடம்

பாலாவிடம்

தனக்கு திரையுலகில் பெரும் திருப்புமுனை தந்த பாலாதான் தன் மகனுக்கு சரியான இயக்குநர் எனத் தீர்மானித்து அவரிடம் ஒப்படைத்தார் விக்ரம்.

வர்மா

வர்மா

பாலா இப்போது நாச்சியார் படத்தை இயக்கி முடித்து, ரிலீசுக்கு தயார்படுத்தி வருகிறார். இந்த நிலையில் துருவை வைத்து இயக்கும் வர்மா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிட்டுள்ளார்.

தலைப்பு

தலைப்பு

பொதுவாக நல்ல தமிழில் தலைப்புகள் இருக்குமாறு பார்த்துக் கொள்வார் பாலா. சேது, பிதாமகன், நந்தா, நான் கடவுள், பரதேசி, அவன் இவன், தாரை தப்பட்டை... இப்படி இருக்கும் அவர் தலைப்புகள். முதல்முறையாக வட மொழி தொனிக்கும் தலைப்பை வைத்துள்ளார் பாலா.

யார் யார்

யார் யார்

படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி எந்த விவரமும் அதில் இல்லை. குறிப்பாக இசையமைப்பாளர் யார் என்பது தெரியவில்லை.

நாச்சியார்

நாச்சியார்

ஒரு படத்தை முடிக்க அதிக காலம் எடுத்துக் கொள்வார் பாலா என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் அவன் இவன் படத்திலிருந்து சீக்கிரமாகவே முடித்துக் கொடுத்துவிடுகிறார் பாலா. நாச்சியார் படத்தை ஓராண்டுக்குள்ளேயே முடித்துவிட்டார். கடந்த பிப்ரவரியில் ஆரம்பித்த படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது.

சரியான குருவிடம்

சரியான குருவிடம்

வர்மா படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்குள் வெளியாகும் என்கிறார்கள். ஃபர்ஸ்ட் லுக் பார்த்த பிறகு சரியான குருவிடம்தான் சிக்கியிருக்கிறார் விக்ரம் மகன் என்பது கோலிவுட் கமெண்ட்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X