twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரிட்டனில் 21 அரங்குகளில் வெளியாகவிருக்கும் பாலாவின் பரதேசி - ஒரு முன்னோட்டம்

    By Shankar
    |

    பாலா இயக்கத்தில் வெளியாகவிருக்கும் பரதேசி திரைப்படம் ரசிகர்களின் மனதில் பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது.

    இந்தப் படம் வரும் மார்ச் 15-ம் தேதி உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது.

    பிரிட்டனில் 21 திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்கிறார்கள்.

    முதல் முறையாக ஜீவி பிரகாஷுடன்...

    முதல் முறையாக ஜீவி பிரகாஷுடன்...

    அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடித்துள்ளனர் இந்தப் படத்தில். அவன் இவன் படத்துக்குப் பிறகு பாலா இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முதல் முறையாக பாலாவுடன் இணைந்துள்ளார். செழியன் ஒளிப்பதிவு செய்ய, வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

    அவன் இவன் சறுக்கல்

    அவன் இவன் சறுக்கல்

    சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என அடுத்தடுத்து வித்தியாசம் காட்டி இந்தியத் திரையுலகை தன் பக்கம் திரும்ப வைத்தவர் பாலா. ஆனால் அவரது இயக்கத்தில் வந்த அவன் இவன், பெரும் விமர்சனத்துக்குள்ளானது. முதல்முறையாக கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தார் பாலா.

    எரியும் பனிக்காடு

    எரியும் பனிக்காடு

    ஆனால் கடும் விமர்சனங்களே ஒரு படைப்பாளியை வீறு கொண்டு எழ வைக்கின்றன. வழக்கமாக ஒரு படம் முடிந்ததும் பல மாதங்கள் அமைதி காக்கும் பாலா, இந்த முறை உடனே களத்தில் இறங்கினார்.

    ரெட் டீ என்ற நாவலைத் தழுவி மலையாளத்தில் எழுதப்பட்ட கதை எரியும் பனிக்காடு. இதைத்தான் தனது கதைக் களத்துக்கேற்ப மாற்றி பரதேசியாக்கியுள்ளார் பாலா.

    90 நாட்களில்...

    90 நாட்களில்...

    பாலாவின் கடந்த காலப் படங்கள் மாதக் கணக்கில் அல்ல.. வருடக் கணக்கில் தயாரிப்பில் இருந்திருக்கின்றன. குறிப்பாக நான் கடவுள். இதுவும் பாலா மீதான் பெரிய குற்றச்சாட்டாக இருந்தது.

    ஆனால் இதையும் பரதேசியில் உடைத்துக் காட்டியுள்ளார். சரியாக 90 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.

    மலையில் நிலம் வாங்கி ஷூட்டிங்

    மலையில் நிலம் வாங்கி ஷூட்டிங்

    படப்பிடிப்பை சிவகங்கை, மானாமதுரை, மூணாறு, பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தி முடித்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக தேனி அருகே மலைப் பகுதியில் சில ஏக்கர் நிலம் வாங்கி செட்கள் அமைத்து படமாக்கியுள்ளார் பாலா.

    பஞ்சம் பிழைக்க தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற பரதேசி கூட்டத்தினரின் கதையினை எதார்த்தமாக படமாக்கி இருக்கிறார்.

    சமகால சரித்திரம்

    சமகால சரித்திரம்

    1930ல் நடைபெறும் கதை என்பதால் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் உழைத்த விருதுகள் குவியும் என்கிறார்கள் நம்பிக்கையுடன். முதன் முறையாக பரதேசி படத்தினை விளம்பரப்படுத்த அனைத்து காட்சிகள் உருவான விதத்தினையும் படமாக்கி இருக்கிறாராம் பாலா.

    ரஜினிக்கும்...

    ரஜினிக்கும்...

    பரதேசி படத்தை இந்திய திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் சிலர் பார்த்து, பாலாவை உச்சி முகந்து பாராட்டியுள்ளனர். இந்த வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் படத்தை போட்டுக் காட்டப் போகிறாராம் பாலா. நான் கடவுள் படம் பார்த்துவிட்டு பாலாவை ரஜினி பாராட்டியது நினைவிருக்கலாம்.

    வடக்கில் இந்தி சப் டைட்டிலுடன்

    வடக்கில் இந்தி சப் டைட்டிலுடன்

    இப்படத்தினைப் பார்த்த இந்தியின் முன்னணி இயக்குனர் அனுராக் காஷ்யப் "பாலாவின் 'பரதேசி' படத்தினை பார்த்தேன். நெகிழ்ந்து விட்டேன்.. அவரது இயக்கத்தில் வெளியான படங்களில் பெஸ்ட் இது தான்" என்று தெரிவித்ததோடு, வட இந்தியாவில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பரதேசி படத்தினை சப்
    டைட்டிலுடன் வெளியிட இருக்கிறார்.

    கேன்ஸ் விழாவில்...

    கேன்ஸ் விழாவில்...

    பரதேசி வெளிவரும் முன்பே கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருக்கிறது. நீண்ட நாட்களாக தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்த பரதேசி படத்தினை நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தை வெளியிட்ட, ஜேஎஸ்கே பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.

    English summary
    Bala's much expected Paradesi movie is going to hit the screens on March 15 worldwide.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X