twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பலம் தா பாடிகார்ட் முனீஸ்வரா..?' இயக்குனர் பாலாவின் 'வர்மா' எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்!

    By
    |

    சென்னை: பாலாவின் வர்மா படத்துக்கு ட்விட்டரில் ரசிகர்கள் கண்டபடி விமர்சனங்களை வைத்துள்ளனர்.

    Recommended Video

    VARMA VERA LEVEL படம் | ACTRESS PRIYADARSHINI CHAT PART-02 | FILMIBEAT TAMIL

    தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், அர்ஜுன் ரெட்டி. இதில், விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்திருந்தார்.

    இந்தப் படம் தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் ஆனது. விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக நடித்தார்.

    அம்மாவை பற்றி உருக்கமான தகவலை பகிர்ந்து கதறி அழுத அனிதா சம்பத்.. கலங்க வைத்த பிக்பாஸ் புரமோ!அம்மாவை பற்றி உருக்கமான தகவலை பகிர்ந்து கதறி அழுத அனிதா சம்பத்.. கலங்க வைத்த பிக்பாஸ் புரமோ!

    கருத்து வேறுபாடு

    கருத்து வேறுபாடு

    பாலா இயக்கினார். படம் முடிந்த பிறகு தயாரிப்பு தரப்புக்கும் பாலா தரப்புக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் படத்தை கைவிடுவதாக அறிவித்தனர். பின்னர் கிரிசாயா இயக்கத்தில் ஆதித்யா வர்மா என்ற பெயரில் உருவாக்கினர். கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியானது இந்தப் படம்.

    பார்க்க வாய்ப்பில்லை

    பார்க்க வாய்ப்பில்லை

    ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இந்நிலையில் ஓரங்கட்டப்பட்டிருந்த பாலாவின் வர்மா படத்தை, ஓடிடியில் வெளியிட்டுள்ளனர். சிம்பிளி சவுத் என்ற ஓடிடி தளத்தில் இன்று (அக்டோபர் 6 ஆம் தேதி) இந்தப் படம் வெளியாகி உள்ளது இந்தப் படத்தை இந்தியாவில் பார்க்க வாய்ப்பில்லை. வெளிநாட்டில் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும்.

    ட்விட்டர் விமர்சனம்

    ட்விட்டர் விமர்சனம்

    இதற்கிடையே வர்மா படத்தைப் பார்த்தவர்கள், ட்விட்டரில் தங்கள் விமர்சனங்களை குறிப்பிட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் இந்தப் படம் சுமார்தான் என்றும் இந்தப் படத்தை கைவிட்டது சரியான முடிவு என்றும் கூறியுள்ளனர். ஒரு சில ரசிகர்கள் படத்தை பாராட்டியும் உள்ளனர்.

    பாடிகார்ட் முனீஸ்வரா?

    பாடிகார்ட் முனீஸ்வரா?

    வர்மா, பார்த்துட்டு இருக்கேன். பலம் தா பாடிகார்ட் முனீஸ்வரா? என்று பிரசாந்த் ரங்கசாமி கூறியுள்ளார். இன்னொரு ரசிகர், முதல் 40 நிமிஷம் போனதே தெரியல, பிஜிஎம், திரைக்கதை எல்லாமே புதுசா இருக்கு. அர்ஜூன் ரெட்டி தீம் மியூசிக் இல்லை. துருவ் மிரட்டுகிறார். இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    ரீமேக் வேண்டாம்

    ரீமேக் வேண்டாம்

    இன்னொரு ரசிகர், படம் சுமார்தான் என்று கூறியுள்ளார். 'பெர்பாமன்ஸ், நகைச்சுவை, சென்டிமென்ட் எல்லாம் நன்றாக இருக்கிறது. பாலா, சொந்த ஸ்கிரிப்ட்டில் வேலை பார்க்கட்டும். தயவு செய்து ரீமேக் பண்ண வேண்டாம். மொத்தமாக படம் சராசரிக்கும் கீழே தான் என்று கூறியுள்ளார்.

    சரியானவர் அல்ல

    சரியானவர் அல்ல

    இன்னொருவர், வர்மா படத்தை கைவிட்டதன் மூலம் நடிகர் விக்ரம் தன் மகனை காப்பாற்றி இருக்கிறார். பாலா சிறந்த இயக்குனர்தான். ஆனால் ரீமேக்கிற்கு சரியானவர் அல்ல என்று கூறியிருக்கிறார்.

    பாலாவின் இயக்கமா?

    பாலாவின் இயக்கமா?

    அர்ஜுன் ரெட்டியின் ரசிகன் என்பதால், கபீர் சிங், ஆதித்யா வர்மா படங்களை பார்க்கவில்லை. பாலாவுக்காக இதைப் பார்க்க ஆரம்பித்தேன். துருவ் தாடி இல்லாமல் அழகாக இருக்கிறார். அதே காட்சிகள், பாடல்கள். டப்பிங் படம் பார்த்த உணர்வை தருகிறது. இது பாலாவின் இயக்கமா? 30 நிமிடத்துக்குப் பிறகு நிறுத்திவிட்டேன் என்று கூறியுள்ளார்.

    English summary
    Bala's Varma film gets mixed reviews from twitter fans
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X