மேஜர் முகுந்த் குடும்பத்துடன் படமெடுக்க ஆசைப்பட்ட பாலா!
எல்லையில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்தின் குடும்பத்துடனருடன் படமெடுத்துக் கொள்ள ஆசைப்பட்ட பாலா, அதை ஜெய்ஹிந்த் 2 விழாவில் நிறைவேற்றிக் கொண்டார்.
சென்னையில் இன்று நடந்த ஜெய்ஹிந்த் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில், எல்லையில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த்தின் குடும்பத்தினரை அழைத்து மரியாதை செய்தார் நடிகரும் இயக்குநருமான அர்ஜூன்.

இந்த விழாவில் பங்கேற்று இசைத் தட்டை வெளியிட்ட இயக்குநர் பாலா பேசுகையில், "வழக்கமாக இது மாதிரி விழாக்களுக்கு நான் செல்வதைத் தவிர்ப்பேன். அர்ஜுன் என்னிடம் மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தினர் கலந்து கொள்ள இருப்பதைச் சொன்ன உடனே நான் ஒப்புக்கொண்டேன்.
நான் இதுவரை எந்த சினிமாகாரர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பியதில்லை. ஆனால் இந்த குடும்பத்தினருடன் நான் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்," என்றார்.
பின்னர் மேஜர் முகுந்த் குடும்பத்தினருடன் சேர்ந்து நின்று படம் எடுத்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











