கொரோனாவால் நெருங்கிய உறவை இழந்துவிட்டேன்… ப்ளீஸ்… மாஸ்க் போடுங்கள்… நடிகர் பாலசரவணன் உருக்கம் !
சென்னை : நெருங்கிய உறவை கொரோனா காவு வாங்கிவிட்டதாக நடிகர் பாலசரவணன் கூறியுள்ளார்.
அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், முககவசம் அணியுங்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வைரஸ் பரவலின் விகிதிம் சுமார் 10% வரை அதிகரித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்
கொரோனா வைரஸ்ஸின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. மருத்துவமனை தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என மிக மோசமான நிலையில் தமிழகம் தள்ளப்படும் என்பதால், மாநில அரசு பல புதிய கட்டுப்பாடுகள் அறிவித்தது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

25 ஆயிரத்தை நெருங்குகிறது
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல உயர்ந்து 25 ஆயிரத்தை நெருங்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய 27 பேர் உட்பட புதிதாக 24,898 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 12,97,500 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

195 உயிரிழப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 195 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவர்களில் 114 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். 81 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களாகும்.

முக கவசம் அணிவீர்
இந்நிலையில் நகைச்சுவை நடிகர் பாலசரவணன், எனது தங்கையின் கணவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அன்பு நண்பர்களே...இன்று எனது தங்கையின் கணவர் கொரோனா காரணமாக இறந்துவிட்டார்...32வயது... தயவு கூர்ந்து மிக கவனமாக இருக்கவும்...நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்...நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்...முக கவசம் அணிவீ்ர் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











