வர்மாவை விடாது துரத்தும் கர்மா.. விக்ரமிற்கு நோட்டீஸ் அனுப்பிய இயக்குநர் பாலா!

ஆதித்ய வர்மா பட விவகாரம் தொடர்பாக விக்ரமிற்கு இயக்குநர் பாலா நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

By Staff

Recommended Video

Director Bala Given Notice to Vikram-காட்சிகளைப் பயன்படுத்தக் கூடாது-நடிகர் விக்ரம்ற்கு நோட்டீஸ்

சென்னை: ஆதித்ய வர்மா படத்தில் தான் எடுத்த காட்சிகளைப் பயன்படுத்தக் கூடாது என இயக்குநர் பாலா, நடிகர் விக்ரம் மற்றும் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற படம் அர்ஜுன்ரெட்டி. விஜய் தேவரகொண்டாவிற்கு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தித் தந்தது இப்படம். எனவே அப்படத்தின் தமிழ் ரீமேக் மூலம் தனது மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டார் விக்ரம்.
அதன் தொடர்ச்சியாக விக்ரம் மகன் துருவ்வை நாயகனாகக் கொண்டு அப்படத்தை, வர்மா என்ற பெயரில் பாலா இயக்கினார்.

வர்மா:

வர்மா:

கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தையொட்டி அப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் திடீரென அப்படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பாலாவின் இயக்கத்தில் திருப்தியில்லை எனக் கூறிய தயாரிப்பு தரப்பு, வேறொரு இயக்குநரைக் கொண்டு மீண்டும் படத்தை முதலில் இருந்து தயாரிக்கப்போவதாக அறிவித்தது.

ஆதித்ய வர்மா:

ஆதித்ய வர்மா:

ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானதாக தகவல்கள் வெளியானது. ஆதித்ய வர்மா படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரீசாயா இயக்கினார். துருவ்வின் தோற்றமும் படத்தில் மாற்றப்பட்டது.

விரைவில் ரிலீஸ்:

விரைவில் ரிலீஸ்:

ஆனால் எங்கு, எப்போது படப்பிடிப்பு நடக்கிறது என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் அப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. விரைவில் படம் ரிலீசாகும் என தகவல்கள் வெளியானது.

பாலா சந்தேகம்:

பாலா சந்தேகம்:

இதனால் தான் எடுத்த காட்சிகளுடன் கூடுதலாக சில காட்சிகளை மட்டும் புதிதாக எடுத்து படத்தை முடித்து விட்டார்களோ என்ற சந்தேகம் இயக்குநர் பாலாவுக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால், தான் எடுத்த காட்சிகளை ஆதித்ய வர்மாவில் பயன்படுத்தக் கூடாது என படக்குழுவுக்கு அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நோட்டீஸ்:

நோட்டீஸ்:

அதில், ‘வர்மா படத்துக்காக தன்னால் எடுக்கப்பட்ட காட்சிகள் எதுவும் ஆதித்ய வர்மா படத்தில் இடம்பெறக்கூடாது என்றும், மீறி இருந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்' என்றும் பாலா எச்சரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நோட்டீசுக்கு பதில் அனுப்புவது குறித்து படக்குழுவினர் ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X