அந்த நடிகை என் மகள் மாதிரி.. எப்படி அடிப்பேன்?.. பாலா ஓபன் டாக்

சென்னை: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வணங்கான் திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகிறது. நீண்ட காலம் கழித்து பாலாவின் படம் வெளியாவதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. அன்றைய தினம்தான் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி, ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்திருக்கும் கேம் சேஞ்சர் படங்களும் வருகின்றன. சூழல் இப்படி இருக்க தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பாலா பேட்டி கொடுத்திருக்கிறார்.

பாலாவின் இயக்கம் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஆவல் அதிகரிக்கும். சேது படத்திலிருந்தே அந்த எதிர்பார்ப்பை அவர் உருவாக்கிவிட்டார். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என வரிசையாக நான்கு படங்களை கல்ட் க்ளாசிக்காக கொடுத்தார். இவற்றில் பிதாமகன் படத்துக்காக விக்ரமும், நான் கடவுள் படத்துக்காக பாலாவும் தேசிய விருது வாங்கினார்கள்.இந்த நான்கு படங்களுக்கு பிறகு அவர் இயக்கிய அவன் இவன், தாரை தப்பட்டை, நாச்சியார் படங்கள் சரியாக போகவில்லை.

bala vanangaan arun vijay

சறுக்கிய படங்கள்: இந்த மூன்று படங்களுமே சரியாக போகாதது மட்டுமின்றி பாலா ஒரே டெம்ப்ளேட்டுக்குள் எடுக்கிறாரே என்றும் பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்தன. மேலும் விக்ரமின் மகனை வைத்து வர்மா படத்தை இயக்கினார் அவர். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து படத்தை பார்த்த விக்ரமோ இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டார். இது பாலாவுக்கு ஏற்பட்ட பெருத்த அவமானம் என்றே கருதப்பட்டது. முக்கியமாக அர்ஜுன் ரெட்டியும், சேதுவும் கிட்டத்தட்ட ஒரே ப்ளாட்டில் வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

வணங்கான்: இதற்கிடையே தனது மனைவி மலரையும் அவர் விவாகரத்து பெற்றார். இப்படி வரிசையாக விழுந்து கொண்டிருந்த பாலா எப்படியாவது மீண்டுவிட வேண்டுமென்று சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்தார். ஆனால் சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக பாலாவும், சூர்யாவும் இந்தப் படத்தை இணைந்து செய்ய் வேண்டாம் என்று முடிவெடுத்து பிரிந்தனர். அதனையடுத்து அருண் விஜய் இந்தப் படத்துக்குள் வந்தார். ஹீரோயினாக மமிதா பைஜு கமிட்டானார்.

அடித்த பாலா?: படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்த சூழலில் மமிதா பைஜுவை இயக்குநர் பாலா ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அடித்துவிட்டதாக சர்ச்சைகள் கிளம்பின. அதனையடுத்து மமிதாவுக்கு பதிலாக ரோஷினி பிரகாஷ் இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டானர். இப்படி ஏகப்பட்ட சிக்கல்களை கடந்து படத்தை முடித்திருக்கிறார் பாலா. படமானது ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகிறது. கண்டிப்பாக பழைய பாலாவாக இந்தப் படத்தில் அவர் வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

பாலா பேட்டி: இந்நிலையில் பாலா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "வணங்கான் ஷூட்டிங்கில் மமிதா பைஜுவுக்கு மேக்கப் போட்டுவிட்டார்கள். எனக்கு மேக்கப் பிடிக்காது என்று மமிதாவுக்கு தெரியும். ஆனாலும் அவரால் தனக்கு மேக்கப் போட்டவரிடம் முறையாக சொல்ல தெரியவில்லை. நான் ஷாட் ரெடி என்று சொன்னதும் போட்டிருந்த மேக்கப்போடு வந்துவிட்டார். இதனால் நான் அடிப்பது போல் லேசாக கையைத்தான் ஓங்கினேன். உடனே நான் அடித்துவிட்டேன் என்று கிளப்பிவிட்டார்கள். அவர் எனக்கு மகள் மாதிரி. எப்படி அவரை அடிப்பேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X