திட்டம் போட்டு திருடிய சோம் டீம்.. டக்குன்னு தோணுச்சு.. எடுத்தேன் என கதறும் பாலா.. வெடித்தது சண்டை!
சென்னை: பாலா டீம் பத்திரத்தை திருட பிளான் போட்ட நிலையில், சோம் டீம் அழகா வேலையை காட்டி திருடினார்கள்.
சோமின் மெத்தைக்கு கீழ் இருந்த அந்த சொத்து பத்திரத்தை பாலா சட்டென எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டார்.
ஆனால், அதனை கேபி பார்த்து விட பஞ்சாயத்து பெரிதானது.

பாட்டியின் சொத்து
அர்ச்சனா பாட்டியின் சொத்துக்களை ஆட்டையைப் போட வெளிநாடுகளிலும் பட்டினத்திலும் வசித்து வந்த சொந்தங்கள் சொந்த ஊருக்கு வரும் டாஸ்க் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஏகப்பட்ட கொடுமைகளை கண்டு ரசித்த பிக் பாஸ் ரசிகர்கள், இந்த கருமத்தையும் கண்டு தொலைப்போம் என பார்த்து வருகின்றனர்.

திருடர்கள்
இந்த டாஸ்க்கில் சோமசேகர், ரம்யா பாண்டியன் மற்றும் கேபி டீமுக்கு திருடர்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதனை பிளான் போட்டு பக்காவாக அந்த குழு பாலாவின் டீமை நல்லா ஏமாற்றி விட்டு ஆட்டையை போட்டு விட்டனர். இந்த சீசன் விஷ பாட்டிலான ரம்யா பாண்டியன் எல்லோரையும் ஏமாற்றி எடுத்துக் கொடுத்த பத்திரத்தை சோம், தனது படுக்கை அறைக்குள் பத்திரப்படுத்தினார்.

டக்குன்னு தோணுச்சு
சோமசேகர் அந்த பத்திரத்தை வைத்ததை யாருமே பார்க்காத நிலையில், பாலாஜி முருகதாஸ் அதனை எப்படி கண்டுபிடித்து எடுத்தார் என்பது பிக் பாஸுக்குத் தான் வெளிச்சம். எப்படி எடுத்த என கேட்டதும், டக்குன்னு தோணுச்சு எடுத்தேன் என பாலா கூறும் பதிலை கேட்ட ரசிகர்கள் இதையெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என கலாய்த்து வருகின்றனர்.

வெடித்தது சண்டை
பாலா பத்திரத்தை மட்டும் எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டு, ஃபைலை பழையபடி சோமின் படுக்கைக்கு கீழே வைத்து விட்டார். இதை பார்த்த கேபி, தனது டீமான ரம்யாவுக்கும் சோமுக்கும் சொல்ல, பத்திரத்தை எடுத்த விவகாரத்தில் பிக் பாஸ் வீட்டில் கேபிக்கும் ஷிவானிக்கும் புது சண்டையே வெடித்தது.

பாலாவின் கதறல்
ரம்யா, சோமசேகர், கேபி எல்லாம் கார்னர் பண்ணி பாலாவுக்கு திருட்டுப் பட்டம் கட்டிய நிலையில், சுச்சி மற்றும் ஷிவானி நல்லா ஏத்திவிட, பாலா, அவன் இவன் என கண்டபடி கத்த ஆரம்பித்து விட்டார். பாலாவின் கதறலுக்கு நடுவே ஷிவானிக்கும் கேபிக்கும் வேற புதுசா சண்டை நடந்ததை வாய் பிளந்து பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், மிக்சர் காலி ஆகிடுச்சா? எதுக்கு அடிச்சிக்கிதுங்க என பங்கம் பண்ணி வருகின்றனர்.

சூப்பர் கூல் சோம்
லாக்கரில் இருந்து பத்திரத்தை எடுத்தவன் எவன் டா என பாலாஜி முருகதாஸ் கத்தி ஒருமையில் திட்டினாலும், சோமசேகர், தனது ஆட்டத்தில் குறியாக இருந்து சூப்பர் கூலாக செயல்பட்டு ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளி வருகிறார். பாலாவின் முரட்டு சுபாவம் இந்த டாஸ்க்கிலும் அவரை வில்லனாக்கி விட்டது.


Click it and Unblock the Notifications











