குற்றப் பரம்பரை படத்தில் கமல்ஹாசன்… அப்செட்டான பாலா… கடைசியில இப்படி ஆயிடுச்சே!
சென்னை: தமிழ்த் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களிள் ஒன்று குற்றப் பரம்பரை.
வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப் பரம்பரை' நாவலை பின்னணியாகக் கொண்டு உருவாகவிருந்த இந்தப் படத்தை இயக்குவதில் பாரதிராஜா, பாலா இருவருக்கும் இடையே பிரச்சினை எழுந்தது.
இந்நிலையில், குற்றப் பரம்பரை படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருந்ததும், அதனால் பாலா அப்செட்டான சம்பவம் குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளன.

வேல ராமமூர்த்தியின் குற்றப் பரம்பரை
வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை நாவலை படமாக எடுக்க இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா இருவரும் தனித்தனியாக முயற்சி செய்தனர். குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு எதிராக ஆங்கிலேயர்கள் நிறைவேற்றிய சட்டத்தால், அவர்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதே இந்த நாவலின் கதைக்களம். தனியார் இதழ் ஒன்றில் கூட்டாஞ்சோறு என்ற தலைப்பில் தொடராக வெளியான குற்றப் பரம்பரை, அதன் பின்னர் நாவலாக வடிவம் பெற்றது. ஆனால், இந்த நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பதில், பாரதிராஜாவும் பாலாவும் முயற்சிக்க, அதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பாரதிராஜாவுக்கு சிவாஜி
சிவாஜி, சரத்குமார் நடிப்பில் பாரதிராஜா இயக்கவிருந்த குற்றப் பரம்பரை திரைப்படம், அப்படியே கிடப்பில் போடப்பட்டது. ஆனால், மீண்டும் அந்தப் படத்தை பாரதிராஜாவால் தொடங்க முடியவில்லை. இதனிடையே பாலாவும் குற்றப் பரம்பரை படத்தை இயக்க முடிவெடுத்தார். இதனால், பாரதிராஜா - பாலா இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி வார்த்தை மோதல்களில் ஈடுபட்டனர். இருவருக்கும் இடையே நடந்த தகராறு காரணமாக குற்றப் பரம்பரை படமாகும் வாய்ப்பு தள்ளிக்கொண்டே போனது.

பாலாவுக்கு கமல்
பாரதிராஜா - பாலா இடையேயான மோதல் ஒருகட்டத்தில் முடிவுக்கு வந்தது. இருவரும் சமாதானம் ஆகிவிட்டாலும் அவர்களால் குற்றப் பரம்பரை படத்தை இயக்க முடியாமல் போனது. இதனிடையே குற்றப் பரம்பரை படத்தில் கமல்ஹாசனை முக்கியமான பாத்திரத்தில் நடிக்க வைக்க பாலா முயற்சி செய்தாராம். இதற்காக கமலை பாலா நேரில் சந்தித்தும் பேசியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்போது கமல் கமிட் ஆகாமல் போனதால் ரொம்பவே அப்செட்டான பாலா, வேறு நடிகர்களை தேர்வு செய்துள்ளார். பாரதிராஜா சிவாஜியை தேர்வு செய்ய, பாலா கமல்ஹாசனை நடிக்க வைக்க முயற்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சசிகுமார் இயக்கத்தில் குற்றப் பரம்பரை
பாரதிராஜா, பாலா இருவரும் குற்றப் பரம்பரை படத்தை கைவிட, அது இப்போது சசிகுமாரின் கைகளுக்கு சென்றுள்ளது. ஆனால், குற்றப் பரம்பரை நாவலை படமாக எடுக்காமல், வெப் சீரிஸ்ஸாக இயக்கவுள்ளராம் சசிகுமார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க சசிகுமார் இயக்கும் குற்றப் பரம்பரை வெப் சீரிஸ், ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. முக்கியமாக இந்த சீரிஸில் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் லீடிங் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











