25 Years Of Sethu: விக்ரமிற்கு வாழ்க்கை கொடுத்த சேது.. பாலாவின் சேது ரிலீஸ் ஆகி 25 ஆண்டுகள் ஆச்சு!

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றிப் படமாக உருவாவது என்பது அவ்வளவு எளிதில் சாத்தியமான விஷயம் கிடையாது. அதுவும், பெரும் படங்களுக்கு மத்தியில் ஒரு சிறிய படம் ரிலீஸ் ஆகி அதில் வெற்றியும் பெறுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. அதுவும் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட தோல்விப் படங்களை கொடுத்த பின், ஒரு நடிகர் ஒரு வெற்றிக்கு பின்னர் மாபெரும் கதாநாயகனாக உருவாகியுள்ளார் என்றால் அவரது சினிமா வாழ்க்கை குறித்து தெரிந்துகொள்ளதானே வேண்டும். அப்படியான படம் சேது, அந்த நடிகர் விக்ரம். இந்தத் தொகுப்பில் சேது படம் குறித்தும், விகரம் குறித்தும் காணலாம்.

விக்ரம் என்று கூறுவதைவிட சியான் விக்ரம் என்று கூறுவதுதான் அவருக்குப் பொருத்தமானதாக இருக்கும். அப்படி விக்ரமிற்கு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்த படம் சேது. அதன் இயக்குநர் பாலா. பாலாவின் முதல் படமான சேது படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்தார். பாலா, இயக்குநர் பாலு மகேந்திராவிடம் பல ஆண்டுகள் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இவரது இயக்கத்தில் முதன் முதலில் வெளியான சேது படம், மாபெரும் ஹிட் படமாக மாறியது. சேது படம் கடந்த 1999ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

Bala Vikram Sethu Movie Celebrates 25 Years Sethu Movie Released 1999 and Celebrated All Over Tamilnadu 25 Years Of Bala

சேது படத்தில் நடிப்பதற்கு முன்னர் விக்ரம் 1990ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இந்தப் படம் இவருக்கு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. அடுத்த 9 ஆண்டுகளில் இவர் 20 படங்களில் நடித்துவிட்டார். ஆனால் இவை அனைத்தும் அவரை வெற்றியாளராக மாற்றவில்லை. 1999ஆம் ஆண்டு வெளியான சேது படம் பெரும் வெற்றிப் படமாக மாறியது. நடிப்பது மட்டும் இல்லாமல், சினிமாவில் தன்னை தக்கவைத்துக் கொள்ள விக்ரம் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் வலம் வந்தார்.

Bala Vikram Sethu Movie Celebrates 25 Years Sethu Movie Released 1999 and Celebrated All Over Tamilnadu 25 Years Of Bala

சேது: சேது படத்தினைப் பொறுத்தவரையில், விக்ரம், அபிதா, சிவக்குமார் என பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே பாலாவின் கதையும் இயக்கமும்தான். தனது அறிமுகப் படத்திலேயே மாபெரும் வெற்றிப் படத்தினைக் கொடுத்த பாலா மீதும் அவர் சினிமா மீதும் ரசிகர்களுக்கு தனி ஈர்ப்பு ஏற்பட்டது. இன்றைக்கும் பாலா படம் வெளியாகின்றது என்றாலே ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு உள்ளார்கள்.

இளையராஜா: படத்திற்கு இளையராஜாவின் இசை மாபெரும் உதவியாக அமைந்தது. இவரது பாடல்கள் படத்தினை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முக்கிய காரணமாக அமைந்தது. இதுமட்டும் இல்லாமல், படத்தில் கதாநாயகனை மிகைப்படுத்தும் காட்சிகள் எதுவும் இல்லாததால், ரசிகர்களுக்கும் படம் ரொம்ப பிடித்துப் போனது. அதேநேரத்தில், படத்தில் அமைக்கப்பட்டிருந்த காதல் காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடினர்.

Bala Vikram Sethu Movie Celebrates 25 Years Sethu Movie Released 1999 and Celebrated All Over Tamilnadu 25 Years Of Bala

25 ஆண்டுகள்: மேலும் படத்தின் க்ளைமேக்ஸ் ரசிகர்களை கலங்க வைத்துவிட்டது. படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகின்றது. அதேநேரத்தில் தமிழ் சினிமாவுக்கு பாலா என்ற இயக்குநர் அறிமுகமாகியும் 25 ஆண்டுகள் ஆகின்றது. பாலா அதன் பின்னர் இயக்கிய படங்களும் மிகவும் அழுத்தம் திருத்தமான, ரசிகர்கள் மனதில் மட்டும் இல்லாமல், காலத்திற்கும் கொண்டாடப்படும் கிளாசிக் படங்களைக் கொடுத்து வருகின்றார். அதேபோல், சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பெருமை தேடித்தரும் நடிகர் விக்ரம் வெளிச்சத்திற்கு வந்தது என்பது, பாராட்டப்படவேண்டியதுதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X