ஹீரோவான கலக்கப்போவது யாரு பாலா.. சம்பளத்தை என்ன செஞ்சாரு தெரியுமா?.. நிஜமாவே ஹீரோதான்

சென்னை: சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டவர் பாலா. அன்றிலிருந்து KPY பாலா என்று அழைக்கப்படுகிறார். மேலும் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். பாலாவை பொறுத்தவரை ஓடி ஓடி உதவி செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் காந்தி கண்ணாடி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இந்நிலையில் அவரை ரசிகர்கள் பாராட்டிவருகிறார்கள்.

சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட KPY பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனதால் அவர் KPY பாலா என்று அழைக்கப்படுகிறார். அந்த ஷோவுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்த அவர் தற்போது மேடை நிகழ்ச்சிகளையும் கலகலவென தொகுத்து வழங்குகிறார். அவருக்கு சினிமாவிலு நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. ஜுங்கா, தும்பா, சிக்சர், காக்டெயில், புலிக்குத்தி பாண்டி, லாபம், ஆண்ட்டி இந்தியன், நாய் சேகர், தேஜாவூ, கனம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. இன்னும் சில படங்களிலும் அவர் கமிட்டாகியிருக்கிறார்.

பாலாவின் உதவிகள்: சினிமாவில் இப்போதைக்கு அவர் வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் ஏகப்பட்ட பேருக்கு பல உதவிகளை செய்துவருகிறார். அனாதை இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு முதலில் உதவ ஆரம்பித்த அவர் படிப்படியாக பலருக்கும் உதவ ஆரம்பித்தார். அதன்படி காமெடி நடிகர் பாவா லட்சுமணனுக்கு சர்க்கரை நோய் காரணமாக கால் கட்டை விரல் அகற்றப்பட்டபோது அவருக்கு உதவி செய்த வெகு சிலரில் பாலாவும் ஒருவர்.

Bala who is going to be involved has built houses for two families
Photo Credit:

ஆம்புலன்ஸ் தந்து உதவிய பாலா: அதுமட்டுமின்றி மலை கிராம மக்கள் மற்றும் முதியோர் இல்லத்துக்கு தனது செலவில் 4 ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த சம்பவமும் பலரையும் நெகிழ செய்தது. குறிப்பாக சினிமாவில் வளர்ந்து வரும் சூழலிலேயே இப்படிப்பட்ட உதவிகளை அவர் செய்வதால் கண்டிப்பாக அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும். இந்த பெரிய மனம் யாருக்கும் வந்துவிடாது என்றும் பலர் கூறுகிறார்கள்.

ஹீரோவான பாலா: சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்துவந்த அவர்; இப்போது காந்தி கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகாகியிருக்கிறார். அவர் கதாநாயகன் ஆனது பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. ஷெரிப் இயக்கியிருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. ஹீரோவாகவும் பாலா வெல்ல வேண்டும் என்பதே பலரிடம் ஆவலாகவும் கருத்தாகவும் இருக்கிறது.

உதவி செய்த பாலா: இந்நிலையில் ஹீரோவான பாலா அந்தப் படத்துக்காக வாங்கிய சம்பளத்தில் செய்த விஷயம் தெரியவந்திருக்கிறது. அதன்படி மொத்தம் இரண்டு குடும்பங்களுக்கு அந்தப் பணத்தில் வீடு கட்டிக்கொடுத்திருக்கிறார். அவர்களில் தண்டு வடம் பாதிக்கப்பட்ட சிறுமியும் அடங்குவார் எனது குறிப்பிடத்தக்கது. ஹீரோவானாலும் தொடர்ந்து உதவுவதை நிறுத்தாத பாலா உண்மையிலேயே ஹீரோதான் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X