Just In
- 9 min ago
கல்லடி வரும்னு நினைச்சேன்.. ஆனா அன்பு அடிதான் வந்திருக்கு.. பிக்பாஸ் குறித்து மனம் திறந்த பாலாஜி!
- 59 min ago
பின்னாடி என்னம்மா பேலன்ஸ் பண்றாங்க.. வேற லெவல் ஸ்குவாட் போடும் ரகுல் ப்ரீத் சிங்.. வைரல் வீடியோ!
- 1 hr ago
வில்லனுடன் காதல்.. 14 வயது வித்தியாசம்.. காதல் என்ன வயசு பார்த்தா வருது? பிரபல நடிகை கேள்வி!
- 2 hrs ago
கணவருக்கு பிறந்த நாள்.. கட்டியணைத்து முத்தம் கொடுத்த குஷ்பு.. வைரலாகும் போட்டோஸ்!
Don't Miss!
- News
மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா -ஆட்டம் காணும் மம்தா அமைச்சரவை
- Finance
ஆல்பாபெட்டின் பிரம்மாண்டமான பலூன் இணைய சேவை திட்டத்தினை நிறுத்த திட்டம்.. !
- Sports
இனிமே இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இந்திய அணியால் ஆஸி.வுக்கு நேர்ந்த கதி!
- Automobiles
வாழ்க்கைய செமயா என்ஜாய் பண்றாங்க... வாழ்ந்தா பைலட்கள் மாதிரி வாழணும்... ஏன் தெரியுமா?
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் ஆரியை பாலாஜியுடன் கோர்த்துவிட்டார் ரியோ.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் மற்றும் பெஸ்ட் பர்ஃபாமர் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், பாலாஜி ஆகிய மூன்று பேர் கேப்டன் டாஸ்க்குக்கு தேர்வானார்கள்.
சில சமயம் கமலின் முன்னிலையில் ஞாயிற்றுக் கிழமையே கேப்டன் டாஸ்க் நடைபெறும். சில சமயம், பிக்பாஸ் வீட்டில் பிஸிக்கல் டாஸ்க்காக கேப்டன் டாஸ்க் நடைபெறும்.

மூன்று நிறங்களில் க்யூப்
அந்த வகையில் கேப்டன் டாஸ்க்குக்கு தேர்வான மூன்று போட்டியாளர்களுக்கு இன்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கார்டன் ஏரியாவில் மேலே கட்டப்பட்ட வலையில் சிவப்பு, பச்சை, வயலெட் என மூன்று நிறங்களில் பல க்யூப்கள் கொட்டப்பட்டிருந்தன.

அதிக க்யூப்புகள்
தலைக்கு மேல் கட்டப்பட்டிருந்த அந்த வலையில் இருந்த க்யூப்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிறத்தில் இருந்த க்யூப்களை மட்டும் போட்டியாளர்கள் தட்டி தட்டி கீழே விழ செய்ய வேண்டும். அப்படி யார் அதிகமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிறத்தை தேர்வு செய்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்.

பாலாஜிக்கு ஆரி
அதில் மற்றவருக்கு ஒதுக்கப்பட்ட க்யூப்பை கீழே தள்ளினால் பாயிண்ட்ஸ் மைனஸ் செய்யப்படும். இந்நிலையில் பாலாஜி தட்டிவிடும் க்யூப்களை கண்காணிக்க ரியோ, ஆரியை அசைன் செய்திருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் சலசலப்பு
போட்டியின் இறுதியில் க்யூப்களை கவுண்ட் செய்யும் போது பாலாஜி சொன்ன கணக்கும் ஆரி சொன்ன கணக்கும் மாறியது. இதனால் ஆரி மாற்றி மாற்றி பேசுவதாக பாலாஜி குற்றம் சாட்டினார். சனம் ஷெட்டியும் ஆரி மாற்றி பேசுவதாக கூறினார். இதனால் பிக்பாஸ் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது.

என் கணக்கை ஏற்காதே
தான் மாற்றி மாற்றி பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தான் சொல்வதை ஏற்க வேண்டாம் என ரியோவிடம் கூறினார் ஆரி. பாலாஜி சொன்ன கணக்கின் படியே பார்த்த போதும் ஜித்தன் ரமேஷே வெற்றி பெற்றதாக அறிவித்தார் ரியோ.

கோர்த்துவிட்ட ரியோ
பிக்பாஸும் பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனான ஜித்தன் ரமேஷுக்கு வாழ்த்து கூறினார். இதனை பார்த்த ரசிகர்கள், ஏற்கனவே பாலாஜிக்கும் ஆரிக்கும் இடையில் பிரச்சனை இருக்கும் போது ரியோ ஏன் ஆரியை பாலாஜிக்கு அசைன் செய்து கோர்த்துவிட்டார் என கடுகடுத்தனர்.

வொர்ஸ்ட் பர்ஃபாமர்
தொடர்ந்து லிவிங் ஏரியாவில் அமர்ந்து டீம் பிரித்தார் ஜித்தன் ரமேஷ், அப்போது பாலாஜிக்கு வைஸ் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. தூங்குபவர்கள் மற்றும் மைக் மாட்டாதவர்களை தான் முதல் ஆளாக வொர்ஸ்ட் பர்ஃபாமரில் கொண்டு வரவேண்டும் என்றார்.

ஆமாம் தட்டிக் கழிக்கிறேன்
அதனைக் கேட்ட பாலாஜி, தூங்குவதும் மைக்கை மாட்டாமல் இருப்பதும் நான்தான். ஆகையால் எனக்கு வைஸ் கேப்டன் பதவி வேண்டாம் என்றார். அதற்கு ஆரி, பொறுப்ப தட்டி கழிக்காதீங்க என்றார். நான் பொறுப்ப தட்டிதான் கழிக்கிறேன் என்ற பாலா வேண்டவே வேண்டாம் என்றார்.