அரிச்சந்திரனின் அடுத்த பிறவி ஆரி.. கும்பிடு போட்டு வெறுப்பேற்றிய பாலாஜி.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!
சென்னை: அரிச்சந்திரனின் அடுத்த பிறவி என ஆரியை கையெடுத்து கும்பிட்டு பாலாஜி நக்கலடித்தது ரசிகர்களை செம காண்டாக்கியது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி, ஆரம்பம் முதலே டபுள் கேம் ஆடி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் வாரத்திலேயே தனது அப்பா அம்மா குறித்து இல்லாததை பேசினார்.
தொடர்ந்து சனம் ஷெட்டியையும் அவதூறாக பேசினார். அப்போதே அவரை ரெட்கார்டு கொடுத்து வெளியேற்று வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்ததன.

ஓவர் ஆட்டிட்யூட்
ஆனால் அதனை விஜய் டிவியோ கமலோ கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து ஆரியிடமும் திமிராக பேசுவது அவரிடம் ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவது என இருந்து வருகிறது.

திருந்தவில்லை
அவரை அசிங்கப்படுத்தும் வரை அசிங்கப்படுத்திவிட்டு, கமல் கேட்டுவிடுவாரோ என்று எண்ணி கமல் எபிசோடுக்கு முன்பாக மன்னிப்பு கேட்டு வருகின்றார். பாலாஜி முழுக்க முழுக்க நடிக்கிறார் அவர் திருந்தவில்லை என்பது மக்களுக்கு தெளிவாக புரிந்துவிட்டது.

நம்பி பாராட்டிய கமல்
ஆனால் கமல்ஹாசன் பாலாஜியின் நடிப்பை உண்மை என நம்பிக்கொண்டிருக்கிறார். அவரது ட்ரான்ஸ்ஃபர்மேஷனை குறிப்பிட்டு பாராட்டும் தெரிவித்து வருகிறார். நேற்றைய எபிசோடிலும் இதுதான் நடந்தது.

ஆரியை கட்டம் கட்டி
கமல் பாராட்டி விட்டு அந்தப் பக்கம் போனதும் இந்தப் பக்கம் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார் பாலாஜி. கமல் பிரேக் விட்டு சென்றதும், கோழிப் பண்ணை டாஸ்க்கில் முதலில் ரூல்ஸை பிரேக் பண்ணியது ஆரிதான் எனக் கூறி அர்ச்சனா, ரம்யா, பாலாஜி என மூன்று பேரும் கட்டம் கட்டினர்.

ஆரியை அட்டாக்
அப்போது பேசிய அர்ச்சனா, நான் நல்லா விளையாடியதால் தான் என்னை பெஸ்ட் பர்ஃபாமர் என்று கூறினார்கள். நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்று பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று ஆரியை அட்டாக் செய்தார்.

ஒத்து ஊதிய பாலாஜி
அடுத்து வந்த பாலாஜி மற்றவர்களை குறைசொல்லி சொல்லி விளையாடுவது என்ன ஸ்ட்ரேட்டர்ஜி என்று தன் பங்குக்கு ஆரியை பிடித்து ஏறினார். மேலும் அர்ச்சனாவிடமும் ஒத்து ஊதிய பாலாஜி, இரண்டு பேராக தொடக்கூடாது என்று கூறிய போதும் ரூல்ஸை பிரேக் பண்ணியது இவர்தான் என்றார்.

நான்தான் பிக்பாஸ்
தொடர்ந்து பேசிய ரம்யா, நீங்கள் தான் பிக்பாஸின் ரூல்ஸையே பிரேக் பண்ணினீர்கள் என்றார். அதற்கு பதில் சொன்ன ஆரி, ஆமாம் நான்தான் பிக்பாஸ் ரூல்ஸை பிரேக் பண்ணினேன், மற்றவர்கள் அனைவரும் சரியாகத்தான் விளையாடினார்கள் என்றார்.

அரிச்சந்திரனுக்கு அடுத்தப்பிறவி
அப்போது பேசிய பாலாஜி, அரிச்சந்திரனுக்கு அடுத்தப்பிறவியே நீங்கதான். நீங்க உள்ளே இருக்கும் என்னை உள்ளே அனுப்பியதற்கு ரொம்ப நன்றி பிக்பாஸ் என்று கையை கும்பிட்டப்படி ஆரியை வெறுப்பேற்றினார்.

வெளியே போனதும் கிடைக்கும்
மேலும் இந்த புண்ணியத்த எந்த ஜென்மத்துல தீர்க்கப்போகிறேனோ என்றும் கூறினார் பாலாஜி. அதனைக் கேட்ட ஆரி, இந்த ஜென்மத்திலேயே கிடைத்து விடும் என்றார். அதற்கு நீங்க வெளியே போனதுமே நிறைய கிடைக்கும் என நக்கலாக கூறினார் பாலாஜி.

எனக்கும் கிடைக்கும்
அதற்கும் டென்ஷனாகாத ஆரி ஆமாம் தம்பி உனக்கும் கிடைக்கும் எனக்கும் கிடைக்கும் என்றார். தொடர்ந்து வா தம்பி வந்து பக்கதுல உட்காரு என்று கூறினார் ஆரி. அதற்கு அரிச்சந்திரன் பக்கத்துலலாம் உட்கார கூடாது என வெறுப்பேற்றினார்.

நல்லா நடிக்க வருது
அதனை பார்த்த ரம்யா, ஆரியை நக்கலடிப்பது போல் வேகமாக சிரித்து விட்டு வாயை மூடிக்கொண்டார். ஆனால் அதற்கு எதுவும் ரியாக்ட் செய்யாத ஆரி, பாலாஜியிடம் உங்களுக்கு நல்லா நடிக்க வருது என்றார்.

திருந்தவே மாட்டியாப்பா
அதற்கு உங்களவுக்கு நடிக்க வரவில்லை. இப்போதுதான் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன் என்றார். பாலாஜியின் இந்த பிஹேவிங்கை பார்த்த ரசிகர்கள் நீயெல்லாம் திருந்தவே மாட்டியாப்பா, மன்னிப்பு கேட்டதெல்லாம் நடிப்பா என துப்பாத குறையாக கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











