தலையணையை தூக்கியடித்து.. ஆரியிடம் கொலை கொடூரமாக நடந்து கொண்ட பாலாஜி.. பகீர் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்டுகளை சந்திப்பது வழக்கம்.
இதற்கான புரமோதான் மிகவும் தாமதமாக வெளியாகி வரும். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

நள்ளிரவிலும் சண்டை
வழக்கமாக கமல் பேசும் புரமோ வெளியாகும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்த சம்பவங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, நள்ளிரவிலும் பாலாஜி மற்றும் ஆரிக்கு இடையேயான சண்டை தொடருகிறது. பிக்பாஸ் வீட்டின் லிவிங் ஏரியாவின் தரையில் மேட்டை போட்டு படுக்கப்போகிறார் ஆரி.

காதலிக்கிறத பாத்தீங்களா?
அப்போது அங்கு வரும் பாலாஜி, காதல் கண்ண மறைக்குதுன்னு சொன்னீங்களே, காதலிக்கிறத நீங்க பாத்தீங்களா என்று கேட்கிறார் பாலாஜி. அதற்கு பதில் சொல்லும் ஆரி இவ்ளோ தைரியமா என்கிட்ட பேசுற இல்ல. அதை அவங்க அம்மாக்கிட்ட பேசியிருக்கலாம்ல என்று கூறுகிறார்.

ஆக்ரோஷமான பாலாஜி
இதனால் ஆவேசமாகும் பாலாஜி, இதுவே நீங்க வெளியே இருந்திருந்தா நான் உங்களுக்கு கொடுத்திருக்கும் மரியாதையே வேற என ஆக்ரோஷமாக பேசுகிறார். அதற்கு என்ன மிரட்டுறீயா என்று கேட்கிறார் ஆரி.

வெறுப்பேற்றிய ரம்யா
அப்போது தயவு செய்து நீங்க போய் தூங்குங்க என்று பாலாஜியிடம் சொல்லும் ரம்யா, ஆரியையும் போய் தூங்குங்க என்று கூறுகிறார். அதற்கு ஆரி உங்க ஃபிரண்ட கூட்டிட்டு போங்க என்று ரம்யாவிடம் கூறுகிறார்.

ஷிவானி டாப்பிக்க யார் எடுத்தா?
அதற்கு ஓ.. ஓகே ஓகே ஆரி.. தேங்க்யூ மை டியர் ஃபிரண்ட்.. என்று கும்பிடு போட்டு ஆரியை நக்கலாக வெறுப்பேற்றுகிறார் ரம்யா. தொடர்ந்து பேசும் ஆரி, நான் பாட்டுக்கு படுக்கலாம்னு வர்றேன்.. நான் கேட்டேனா.. ஷிவானி டாப்பிக்க யார் எடுத்தா என்று சக ஹவுஸ்மேட்ஸிடம் கூறுகிறார் ஆரி.

தலையணையை தூக்கியடித்து..
அப்போது ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் பாலாஜி, ஷிவானி டாப்பிக்கை உடுய்யா, ஷிவானி டாப்பிக்கை உடுய்யா என தலையணையை எடுத்து அடிக்கிறார். பாலாஜியின் இந்த நடவடிக்கை பார்த்த ரசிகர்கள், பாலாஜிக்கு ரெட்கார்டு கொடுக்காவிட்டால் கமலுக்குதான் கேவலம் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











