Just In
Don't Miss!
- News
மாசி மகம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்த துர்கா ஸ்டாலின் - வெற்றிக்கு வழிபாடு
- Automobiles
ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி மார்ச் 3ல் தொடக்கம்... விலையை கேட்டால் நீங்களும் புக் பண்ணீருவீங்க...
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Lifestyle
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லவ்வு கேட்டேன்.. நீங்கல்லாம் 'வச்சுக்கோங்க' வகை.. ஃபேன்ஸ் இல்ல ஃபேமிலி.. டிவிட்டரில் உருகும் பாலாஜி!
சென்னை: பாலாஜி முருகதாஸ் தனது ரசிகர்களுக்காக உருகி டிவிட்டியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிக விமர்சனத்துக்குள்ளானவர் பாலாஜி முருகதாஸ்.
அவருடைய சர்ச்சைக்குரிய பேச்சுக்களையும் நடத்தையையும் பார்த்த பார்வையாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து அவரை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

வில்லத்தனம்
பிக்பாஸ் வீட்டில் அவருடைய நடவடிக்கைகள் அத்தனையும் வில்லத்தனமாக இருந்தது. யாரையும் மதிக்காமல் மரியாதை கொடுக்காமல் இருந்தார். டபுள் கேம் ஆடுவது, பின்னால் பேசுவது, போட்டுக் கொடுப்பது என முழு வில்லத்தனத்தையும் இறக்கினார்.

தரக்குறைவாக பேசி
பாலாஜியின் வில்லத்தனத்தால் சக போட்டியாளர்கள் ஹீரோவாக தெரிந்தனர். என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பல இடங்களில் வார்த்தையை விட்டார். ஆண் பெண் என்றும் பாராமல் தரக்குறைவாக பேசினார்.

மன உளைச்சல்..
காலை நீட்டுவது, கையை நீட்டுவது, வெறுப்பேற்றுவது, அடிக்கப் பாய்வது என அடுத்து என்ன செய்வாரோ, பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்குமோ என பார்வையாளர்களின் பிபியை எகிற செய்தார். பார்வையாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார் பாலாஜி என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

டைட்டிலுக்காக போகவில்லை
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ரன்னர் அப் ஆனார் பாலாஜி. இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களுக்கு நன்றி கூறினார் பாலாஜி. மேலும் தான் டைட்டிலுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவில்லை என்றும் கூறியிருந்தார்.

சரி வச்சுக்கோங்க..
இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நான் அன்பைக் கேட்டேன், நீங்கள் சரி வச்சுக்கோங்க என்றீர்கள். வேற என்ன வேணும் எனக்கு.. நீங்க எனக்கு ஃபேன்ஸ் இல்ல ஃபேமிலி என்று பதிவிட்டுள்ளார்.

லைவ் வர முடியல..
மேலும் வீடியோ ஒன்றையும் ஷேர் செய்துள்ளார் பாலாஜி. அதில் உங்க அன்புக்கு உங்க ஓட்டுக்கு எல்லாத்துக்குமே ரொம்ப நன்றி. நீங்க இல்லன்னா நான் இல்ல.. லைவ் கேட்டீங்க லைவ் வர முடியல.. இந்த ஷார்ட் வீடியோ வச்சுக்கோங்க.. லவ் யூ.. என்று வச்சுக்கோங்க என்பதை போல் சைகை காட்டுகிறார்.