செய்வதையெல்லாம் செய்துவிட்டு.. ஆரியின் காலில் விழுந்த பாலாஜி.. என்னா நடிப்புடா சாமி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரியிடம் கேவலமாக நடந்து கொண்ட பாலாஜி கடைசியில் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை ரசிகர்கள் உலக மகா நடிப்பு என கூறி வருகின்றனர் ரசிகர்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஆரியிடம் படு மோசமாக நடந்து கொண்டார்.

இதனால் சமூக வலைதளங்களில் பாலாஜியை கழுவி ஊற்றி வருகின்றனர்.

அர்ச்சனா ஹேப்பி

அர்ச்சனா ஹேப்பி

மொத்த ஹவுஸ்மேட்ஸையும் ஆரிக்கு எதிராய் திருப்பி விட்டுள்ளார் பாலாஜி. ஏற்கனவே அர்ச்சனா, சம்யுக்தா, ரம்யா ஆகியோர் ஆரியின் மீது கோபத்தில் இருந்த நிலையில் பாலாஜிக்கும் ஆரிக்கும் நடந்த சண்டையை அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கார்னர் செய்யப்பட்ட ஆரி

கார்னர் செய்யப்பட்ட ஆரி

ஏற்கனவே இரண்டு குழுக்களாய் இருந்த பிக்பாஸ் வீட்டில் ஆரி மட்டும் தனியாக இருந்து வந்தார். ஒட்டு மொத்த ஹவுஸ்மேட்ஸையும் ஆரிக்கு எதிராய் திருப்பி விட்டுள்ள பாலாஜி, தான்தான் நல்லவர் என்பதை போல் நடந்து கொள்கிறார்.

ஆரியிடம் மன்னிப்பு

ஆரியிடம் மன்னிப்பு

ஆரியிடம் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி, வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் மோசமாக நடந்து கொண்டார். பின்னர் இதையெல்லாம் தவறு என உணர்ந்த பாலாஜி, தனக்கு பேக் ஃபயராகிவிடும் என்ற அச்சத்தில் ஆரியிடம் மன்னிப்பு கேட்டார்.

சாரி சொன்ன ஆரி

சாரி சொன்ன ஆரி

கார்டன் ஏரியாவில் தனிமையில் அமர்ந்திருந்த ஆரியிடம், இன்று நடந்த பிரச்சனை எனக்கு தவறாக தெரிந்தது, அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றார். அதற்கு ஆரி, என்னிடம் நடந்து கொண்டதை போல் நான் உன்னிடம் நடக்கவில்லை.

காலில் விழுந்த பாலாஜி

காலில் விழுந்த பாலாஜி

இதையெல்லாம் யாராவது உனக்கு செய்தால்தான் அந்த வலி உனக்கு தெரியும் என்றார். மேலும் உன்னை ஆம்பளையா என்று கேட்டதற்கும் சாரி என்றார் ஆரி. பின்னர் சற்று நேரம் கழித்து மீண்டும் ஆரியிடம் வந்த பாலாஜி, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இதனால் பதறிய ஆரி என் காலில் விழாதே என்று காலை தூக்கி கொண்டார்.

இழந்துவிட்டாய்

இழந்துவிட்டாய்

தொடர்ந்து பாத்ரூம் ஏரியாவில் ஆஜித்துடன் பேசிக் கொண்டிருந்தார் பாலாஜி. அப்போது அங்கு வந்த ஆரி, உன் மீது ரொம்பவே மரியாதை வைத்திருந்தேன், அதை இழந்துவிட்டாய். இனிமேல் என்னிடம் இருந்து நீ அதை சம்பாதிக்க முடியாது என்றார்.

கால்ல விழுந்து ஆக்டிங்

கால்ல விழுந்து ஆக்டிங்

அதற்கு பதில் சொன்ன பாலாஜி, அதை சம்பாதிச்சு நான் என்ன பண்ணப் போறேன், எனக்கு வேண்டாம் என்று கூறி ஆட்டியூட் காட்டினார். அப்போதும் பாலாஜிக்கு பதில் சொன்ன ஆரி, பேசுறதையெல்லாம் பேசிட்டு வெளியில வந்து கால்ல விழுந்து ஒரு ஆக்ட்டிங் பண்ண என்றார்.

கழுவி ஊற்றும் ரசிகர்கள்

கழுவி ஊற்றும் ரசிகர்கள்

அப்போ நீங்கள் கமல் சார் ஷோல நீங்க பண்ணினதும் ஆக்டிங்தான் என்றார் பாலாஜி. அதற்கு ஆமாம் அப்படியே வச்சுக்கோ என்றார் ஆரி. இதனை பார்த்த ரசிகர்கள், பாலாஜி மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை, நடிக்கிறார் என கழுவி ஊற்றி வருகின்றனர்.

துப்பாத குறையாக திட்டி

துப்பாத குறையாக திட்டி

மன்னிப்பு கேட்பவர் இப்படியெல்லாம் நடந்து கொள்ள மாட்டார்கள், கமல் சாரிடம் நான் பேசியதற்காக காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்று கூறுவதற்காவே இப்படி நடிக்கிறார் என்று துப்பாத குறையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X