இப்போவே கிட்சன் டீம்லேருந்து நீங்க விலகிக்கலாம்.. ஓவராய் பேசிய அனிதா.. ஓடிப்போ என்று விரட்டிய பாலா!
சென்னை: மூன்று நாட்களாய் கடலை பருப்பு ஊறியது தொடர்பாக விசாரித்ததால் எகிறிய அனிதாவுக்கு பக்கா பதிலடி கொடுத்தார் பாலாஜி.
பிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோடில் ஞாயிற்றுக் கிழமை ஊற வைத்த கடலை பருப்பு தொடர்பான பிரச்சனை நடந்தது. இதுகுறித்து பாலாஜி விசாரித்ததால் கடுப்பாயினர் அனிதாவும் ரம்யாவும்.
ரம்யா ஆரியை குறை சொல்வதிலேயே இருந்தார். அனிதா அதுகுறித்து பேசவேக் கூடாது என்றார்.

சின்ன விஷயத்தை..
இதனால் கடுப்பான பாலாஜி பாத்ரூம் விஷயத்துல திரும்பி பேசுலேயா என்றார். அதற்கு பதில் சொன்ன சின்ன விஷயத்தை ரொம்ப நேரமா பேசுற மாதிரி இருந்துச்சு. காலையிலேருந்து அந்த வார்த்தைய நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். அதுக்காகதான் கேட்டேன்.

என்னை மட்டும் ஏன் கேட்குறீங்க?
அதற்கு பேசவே கூடாதுன்னா எப்படி என்று பாலாஜி கேட்க, பேசக்கூடாது என்று சொல்லவில்லை. என் ஒப்பினியன நான் சொன்னேன் என்றார். தொடர்ந்து பேசிய அனிதா, ஆஜித் இது அவ்ளோ பெரிய விஷயம் இல்லை என்று சொன்ன போது எதுவும் கேட்கவில்லை, நான் சொன்னதுக்கு மட்டும் ஏன் கேட்குறீங்க என்று பாலாஜியிடம் எகிறினார்.

ரிஸைன் பண்ணிடுங்க அனிதா
இவ்ளோ இன்வெஸ்ட்டிகேட் பண்ணும் அளவுக்கு அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இதுக்குதான் கிட்சன் டீம்கே வரக்கூடாது. எவ்ளோ செஞ்சாலும் இந்த டீம்ல இப்படிதான் பிரச்சனை வரும் என்று கூறினார் அனிதா. இதனைக் கேட்ட பாலாஜி, நீங்க இப்போவே கிட்சன் கேப்டன் பதவியில் இருந்து விலகிக்கலாம். ரிஸைன் பண்ணிடுங்க.

ஃபோர்ஸ் பண்ணவில்லை
ஆர்வம் உள்ளவர்கள் யாராவது பொறுப்பு எடுத்துக் கொள்வார்கள் என்றார். கேப்டன் ஷிப் நீங்கதான் கொடுத்துதீங்க என்று அனிதா கூற, உங்களை யாரும் ஃபோர்ஸ் பண்ணவில்லை என்று ஒரே போடாய் போட்டார் பாலாஜி.

ஜருக்கடித்த அனிதா
இதனால் அதிர்ச்சியான அனிதா கேப்டன்ஷிப் வேற இது வேற, எனக்கு தோனுச்சுன்னாதான் நான் ரிசைன் பண்ணுவேன் என்று ஜருக்கடித்தார். மேலும் நான்தான் ஃபிரிஜ்ட்ல வைக்கலன்னு ஒத்துக்கிட்டேன்ல அப்புறம் ஏன் அதை பத்தியே பேசுனீங்க என்றார்.

மன்னிப்பு கேட்ட ரம்யா
இந்த பிரச்சனை தொடர்ந்ததால் கடுப்பான ரம்யா, இதுக்கு குக்கிங் டீம்தான் பொறுப்பு எடுத்துக்கணும். குக்கிங் டீம் சார்பா மன்னிப்பு கேட்டுக்றேன். இன்னைக்கு தூக்கம் இல்லாட்டியும் எங்க வேலைய சரியா செஞ்சுருக்கோம். எங்க டீம்குள்ள எந்த பிரச்சனையும் இல்லை. இது கிட்சன் டீம் தவறு என்பதால் டீம் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











