பிக்பாஸ் வீட்டில் முகேன் பாணியில் சேரை உடைத்த பாலாஜி முருகதாஸ்.. மிரண்டுபோன ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி, முகேன் பாணியில் வீட்டில் இருந்த சேரை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ், தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
பிக்பாஸ் வீட்டில் உள்ள எந்த போட்டியாளரையும் மதிக்காமல் ரொம்ப ஆட்டிட்யூட் காட்டி வருகிறார். அதோடு எல்லோரையும் குழப்பிவிட்டு படு தெளிவாக மீன் பிடித்து வருகிறார்.

பெரும் சர்ச்சை
என்னதான், பாலாஜி ஜோராக விளையாடுகிறார் என்றாலும் ஒரு பக்கம் க்ரைம் ரேட்டுகளும் ஏறிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக சனம் ஷெட்டியை தறுதலை என்று திட்டியதும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் அழகிப் பட்டத்தை பெற்றார் என்று கூறியதும் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

காட்டப்படாத விஷயம்
இதற்காகவே பாலாஜியை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தாத குறையாக ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடின் தொடக்கம் நேற்று நடந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக இருந்தது

சூடான வாக்குவாதம்
அப்போது பிக்பாஸ் வீட்டில் ஆரிக்கும் பாலாஜிக்கும் கமல் சாரிடம் பேசியது தொடர்பாக வாக்குவாதம் நடைபெற்றது. இதில் வார்னிங் என்று தான் சொல்லாததை சொன்னது, வாயை நம்பி மட்டுமே வந்திருப்பதாக கூறியது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இருவருக்கும் சூடான வாக்குவாதம் நடைபெற்றது.

நீ ஓட்டு போட்டீயா?
சிம்பத்தியை கிரியேட் பண்ணிதான் போஸ்ட் வாங்கினீங்க என்று பாலாஜியும் சம்யுக்தாவும் மாறி மாறி ஆரியை குற்றம் சாட்டினர். அதற்கு நீ ஓட்டு போட்டீயா என்று வாயை அடைத்தார் ஆரி. அப்போது நான் பொய் சொன்னேன் என்று எப்படி சொல்லலாம் என பாலாஜியிடம் எகிறினார் ஆரி.

நாற்காலியை உடைத்த பாலாஜி
அப்போது சனம் தலையிட, ச்சை என்று கூறி டைனிங் டேபிள் அருகில் இருந்த சேரை கோபத்தில் கீழே தள்ளிவிட்டு வேக வேகமாக சென்றார் பாலாஜி. இருந்த போதும் அதுகுறித்த பிரச்சனை தீரவில்லை மீண்டும் மீண்டும் பாலாஜி ஆரியிடம் வாக்குவாதம் செய்தார்.

பாலாஜி எரிச்சல்
அப்போது என் வாயை நம்பிதான் நான் விளையாடுகிறன். டபுள் கேம் ஆடியோ அல்லது இங்கு இருப்பதை அங்கு போட்டோ அங்கு இருப்பதை இங்கு போட்டோ விளையடவில்லை என்றார் ஆரி. அதற்கு மற்றவர்கள் மீது புகார் சொல்லாமல் விளையாடுங்கள் என எரிச்சலாய் கூறினார் பாலாஜி.

ஆரியை கேவலப்படுத்தி
ஆரியிடம் பாலாஜி வாக்குவாதம் செய்வதை பார்த்த சம்யுக்தா, நீ ஏன் தேவையில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறாய்? உன் நேரம்தான் வீணாகும் என பாலாஜிக்கு சப்போர்ட் செய்வதாக ஆரியை கேவலப்படுத்தும் வகையில் பேசினார்.


Click it and Unblock the Notifications











